டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவில் இருந்து மீளும் இந்தியா : 6,990 பேருக்கு பாதிப்பு - 10,116 பேர் மீண்டனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 190 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 200க்கும் கீழே குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 190 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை தனது பிடியில் வைத்துள்ளது. மே மாதத்தில் தோன்றிய இரண்டாவது அலை இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தினசரி 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். பல்லாயிக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.

Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா? Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?

கொத்துக்கொத்தாக மரணமடையவே சுடுகாடுகளிலும் இடுகாடுகளிலும் இறுதிச்சடங்கு செய்யக்கூட இடமில்லாத நிலை ஏற்பட்டது. கொரோனாவை தடுக்க ஒரே ஆயுதமாக கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு வகையான தடுப்பூசியை நாடு முழுவதும் செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டது. நூறு கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

6,990 பேர் பாதிப்பு

6,990 பேர் பாதிப்பு


கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,45,87,822 பேராக உயர்ந்துள்ளது.

10,116 பேர் மீண்டனர்

10,116 பேர் மீண்டனர்

கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 10,116 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,40,18,299 பேராக அதிகரித்துள்ளது. நோயிலிருந்து குணமடைந்தோர் சதவிகிதம் 98.35% பேராக உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.

 190 பேர் மரணம்

190 பேர் மரணம்

கடந்த 24 மணிநேரத்தில் 190 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மொத்தம் 4,68,980 பேர் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 1,00,543 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது கடந்த 551 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவாகும்.

பாசிட்டிவிட்டி சதவிகிதம்

பாசிட்டிவிட்டி சதவிகிதம்

வாராந்திர பாசிட்டிவிட்டி விகிதம் 0.84% ஆக உள்ளது. இது கடந்த 16 நாட்களாக 1%க்கும் கீழ் உள்ளது. தினசரி பாசிட்டிவிட்டி விகிதம் 0.69% ஆக உள்ளது. இது கடந்த 57 நாட்களாக 2%க்கும் கீழ் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,23,25,02,767 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

English summary
Corona infection is gradually declining in India. The death toll from corona has dropped to less than 200. In India, 6,990 people have been diagnosed with corona in the last 24 hours. In addition, 190 people have died of corona in the last 24 hours, according to the Federal Ministry of Health.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X