சீனா அட்டூழியம்! அருணாச்சல பிரதேச மாநில பகுதிகளுக்கு புதிய பெயர்கள்- மத்திய அரசு கடும் கண்டனம்!
டெல்லி: இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியிருப்பதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தை தமது நாட்டின் ஒரு பகுதியாக உரிமை கோருவது சீனாவின் வாடிக்கை. அருணாச்சல பிரதேசத்துக்கு மத்திய அமைச்சர்கள் யார் சென்றாலும் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அதேபோல் அருணாச்சலப் பிரதேசத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டாலும் கூட சீனா சவுண்டுவிட்டுப் பார்ப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அருணாச்சல பிரதேச எல்லைகளில் அண்மையில் சீனா மிகப் பெரும் ராணுவ குடியிருப்புகளை அமைத்திருந்ததும் அம்பலமானது.
இப்போது சீனா புதிய அடாவடியைக் காட்டியுள்ளது. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் 15 பகுதிகளுக்கு சீனா புதிய பெயரை சூட்டியிருக்கிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சீனா வெளியிட்டிருப்பதுதான் சர்ச்சையாகி உள்ளது. இதற்கு முன்னர் 2016-ம் ஆண்டும் இதேபோல் ஒரு அட்டூழியத்தை சீனா செய்திருந்தது.
அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகளுக்கு புதிய பெயர் சூட்டுவதற்கு சீனா அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருக்கிறதாம். குடியிருப்புகள், ஆறுகள் மற்றும் மலைகள் என மொத்தம் 15 இடங்களுக்கு இப்படி புதிய பெயரிட்டிருக்கிறதாம் சீனா. இதனை மத்திய அரசு மிகக் கடுமையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. சீனா புதிய பெயர்களை சூட்டுவதாலேயே உண்மையான யதார்த்த நிலையை மாற்றிவிடவும் முடியாது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications