இந்த அபத்தம் எங்கும் நடக்காது.. இதைப் பற்றி நீங்க பேசலாமா? - பாகிஸ்தானுக்கு எதிராக பொங்கிய இந்தியா!
டெல்லி : நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்த விவகாரம் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்தியா மத சுதந்திரத்தை நசுக்குகிறது மற்றும் முஸ்லிம்களை துன்புறுத்துகிறது. உலக நாடுகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நாட்டில் சிறுபான்மையினர் உரிமைகளை மீறுபவர்கள், மற்றொரு நாட்டில் சிறுபான்மையினரை நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும் அபத்தம் வேறு எங்கும் நிகழாது எனச் சாடியுள்ளது.

நுபுர் சர்மா
பா.ஜ.கவில் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். அதேபோல் நவீன் ஜிண்டால் தனது ட்விட்டர் பதிவில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார். நபிகள் நாயகம் பற்றிய பா.ஜ.க நிர்வாகிகளின் இந்த சர்ச்சை கருத்துகளுக்கு இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் கண்டனம் வலுத்தது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் பெரும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடுகள் கண்டனம்
நபிகள் நாயகத்துக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த சர்ச்சை விவகாரத்தில் அரபு நாடுகளுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. அரபு நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து, நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் மீது பாஜக நடவடிக்கை எடுத்தது.
Recommended Video

பொறுப்பில் இருந்து நீக்கம்
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்த விவகாரம் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர்கள் பொறுப்பில் இருந்து நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் நீக்கப்பட்டனர். எந்தவொரு மதத்தையும் அவமதிப்பதை பாஜக ஏற்காது என அக்கட்சி பொதுச் செயலாளர் அருண் சிங் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

பாகிஸ்தான் கண்டனம்
நபிகள் நாயகம் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தானும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நபிகள் நாயகம் பற்றி இந்தியாவின் பாஜக தலைவரின் புண்படுத்தும் கருத்துக்களை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்தியா மத சுதந்திரத்தை நசுக்குகிறது மற்றும் முஸ்லிம்களை துன்புறுத்துகிறது என்று திரும்பத் திரும்ப பாகிஸ்தான் சொன்னது. உலக நாடுகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் மற்றும் இந்தியாவை கடுமையாக கண்டிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

அபத்தம்
பாகிஸ்தானின் கண்டத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நபிகள் நாயகம் தொடர்பாக இந்தியாவில் பாஜக நிர்வாகிகள் பேசியதை கண்டித்து பாகிஸ்தான் வெளியிட்ட கருத்துகளை கவனித்தோம். தங்கள் நாட்டில் சிறுபான்மையினர் உரிமைகளை மீறுபவர்கள், மற்றொரு நாட்டில் சிறுபான்மையினரை நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும் அபத்தம் வேறு எங்கும் நிகழாது.

முதலில் நீங்க பண்ணுங்க
இந்தியாவைக் கண்டிக்கும் பாகிஸ்தான் முதலில் அங்கு வசிக்கும் சிறுபான்மையினரின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தான், தங்கள் நாட்டில் வசிக்கும் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு, நல்வாழ்வில் கவனம் செலுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பாகிஸ்தானால், இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் எத்தகைய துன்புறுத்தலுக்கு ஆளாகினர் என்பதற்கு உலகமே சாட்சியாக உள்ளது.

இந்தியா பதிலடி
ஆனால், இந்தியா, பாகிஸ்தானுக்கு நேர் எதிராக மாறுபட்டது. பாகிஸ்தானில் மதவெறியர்களைப் புகழ்ந்து, அவர்களின் நினைவாக நினைவுச் சின்னங்கள் கட்டப்படுகின்றன. ஆனால், இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்து வருகிறது. எனவே, பாகிஸ்தான், தங்கள் நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு, நல்வாழ்வில் கவனம் செலுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்" எனப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
-
கண்கள் சிவந்த டிரம்ப்.. பாகிஸ்தான் எடுக்கும் முடிவு.. ஆனால் "அந்த" ஒரு சிக்கல் இருக்கே! அடுத்து என்ன -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications