டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மிரட்டல் வேகம்... வாயை பிளந்த அதிகாரிகள்.. இந்தியாவின் அதிவேக ''ரயில் 18'' பறக்கும் ஸ்பீடை பாருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    நாட்டின் அதிவேக ரயில் 18 சோதனை... 200 கி.மீ வேகம் வரை செல்லும்- வீடியோ

    டெல்லி: சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாக ரயில் 18 என்ற புதிய அதிநவீன ரயில் இயக்கப்பட உள்ளது.

    இந்த ரயில் ரூ.100 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் அதிவேக ரயிலான 18, நேற்று சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.

    டெல்லியில் உள்ள கோடா - ஷாவய் மதோபூர் இடையே 180 கிமீ வேகத்தில் இயக்கப்பட்ட அந்த ரயில், குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைந்தது. 200 கிமீ வேகம் வரை இயக்கி ரயிலை அதிகாரிகள் சோதித்து பார்த்தனர்.

    3 மாதம் சோதனை

    3 மாதம் சோதனை

    2019 ஜனவரி முதல் இந்த ரயில் 18 சேவை, பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதே நேரம் மூன்று மாதங்களுக்கு சோதனை முறையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான பகுதி சென்னையில் உருவாக்கபட்டது. இதில் இன்ஜின் கிடையாது என்பதுதான் தனி சிறப்பு.

    ஏராளமான வசதி

    புஷ் பேக் இருக்கைகள் கொடுக்கப்படுவதுடன், கால்கள் வைக்க தாராளமான இடவசதி பயணிகளுக்கு நிறைவான பயண அனுபவத்தை ரயில் 18 சேவை வழங்க உள்ளது. ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனி டிவி வசதி, சிசிடிவி கேமரா, சுகாதாரமான கழிப்பறை வசதி, வினைல் ஃபுளோரிங் உள்ளிட்டவற்றுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    அதிவேக ரயில் 18 சேவை

    சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை போன்றே 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதி நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் 18லில், பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து போபால் வரையிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 150 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது. மணிக்கு 89 கிமீ என்ற சராசரி வேகத்தில் செல்கிறது. ஆனால் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் 18, மணிக்கு 200 கிமீ வேகம் செல்லக் கூடியது.

    எக்ஸ்பிரஸ் ரயில்

    எக்ஸ்பிரஸ் ரயில்

    1988ம் ஆண்டு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. சதாப்தி என்றால் சமஸ்கிருதத்தில் நூற்றாண்டு என்று பொருள்படுகிறது. நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையில் பகல்நேர சொகுசு ரயிலாக இயக்கப்படும் சதாப்தி சொகுசு ரயில்கள் சில நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும். காலையில் புறப்பட்டு மீண்டும் அன்றைய தினமே திரும்பிவிடும். இதனால், மிக விரைவான போக்குவரத்து வசதியை வழங்குகின்றன. அதே போன்ற சேவையை ரயில் 18 வழங்க உள்ளது

    English summary
    Shatabdi express which will be replaced by the train 18 .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X