டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு.. எச்சரிக்கும் புள்ளிவிவரங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் வேலையின்மை விகிதம், அக்டோபரில் 8.5% ஆக உயர்ந்தது, இது ஆகஸ்ட் 2016 முதல் மிக அதிகரித்த விகிதமாகும். செப்டம்பர் மாதம் 7.2 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், மேலும் அதிகரித்துள்ளதை இந்த புள்ளி விவரம் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்இஇ) இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, பொருளாதாரத்தில் மந்தநிலையின் தாக்கம் நிலவுகிறது என்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவின் உள்கட்டமைப்பு உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் 5.2% வீழ்ச்சியடைந்தது, இது கடந்த பல ஆண்டுகளில் மிக மோசமான செயல்பாடு என்று அரசு புள்ளி விவரமும் சுட்டிக் காட்டியுள்ளன.

ஏ குருவி.. சிட்டுக் குருவி... பாசத்துக்குரிய பாரதிராஜாவும்.. வணக்கத்துக்குரிய இளையராஜாவும்!ஏ குருவி.. சிட்டுக் குருவி... பாசத்துக்குரிய பாரதிராஜாவும்.. வணக்கத்துக்குரிய இளையராஜாவும்!

சுதந்திர இந்தியாவில் முதல் முறை

சுதந்திர இந்தியாவில் முதல் முறை

சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி கே பரிதா ஆகியோரால் எழுதப்பட்ட மற்றும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலையான வேலைவாய்ப்பு மையத்தால் வெளியிடப்பட்ட ஒரு புதிய கல்விக் கட்டுரையின் படி, 2011-12 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் மொத்த வேலைவாய்ப்பு 9 மில்லியன் வரை குறைந்துள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் இதுபோன்ற வேலைவாய்ப்பு சரிவு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை.

பல்கலை. பேராசிரியர்

பல்கலை. பேராசிரியர்

மெஹ்ரோத்ரா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராகவும், பரிதா பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்கள். நாட்டில் வேலைவாய்ப்பு 2011-12ல் 474 மில்லியனாக இருந்ததாகவும், 2017-18 ஆம் ஆண்டில், அது, 465 மில்லியனாகக் குறைந்ததாகவும், இவர்கள் கூறியுள்ளனர்.

வேளாண்மை துறை

வேளாண்மை துறை

வேளாண் துறையில் வேலைவாய்ப்பு வீழ்ச்சி என்பது 2011-12 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் 4.5 மில்லியன் பா (மொத்தம் சுமார் 27 மில்லியன்) என்ற விகிதத்தில் உள்ளது. 2011-12 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி துறையில், 3.5 மில்லியன் வேலை வாய்ப்பு சரிவை சந்தித்துள்ளது.

கல்வி நிலை

கல்வி நிலை

ஆய்வின் படி, கல்வியின் ஒவ்வொரு நிலைக்கும், வேலையின்மை விகிதம் 2017-18 ஆம் ஆண்டளவில் அதிகரித்துள்ளது கல்வியறிவற்றவர்களிடையே 7.1 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை உள்ளது. ஆரம்பக் கல்வி வரை கற்ற இளைஞர்களிடையே, 8.3 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை உள்ளது.

கல்வித் தகுதி அதிகரிப்பு

கல்வித் தகுதி அதிகரிப்பு

உயர்நிலைக் கல்வி முடித்தவர்களிடையே வேலையின்மை என்பது 24 சதவீதமாகவும், பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை 35.8 சதவீதமாகவும், முதுகலை பட்டதாரிகளிடையேயான வேலைவாய்ப்பின்மை 36.2 சதவீதமாகவும் உள்ளது. அதாவது, கல்வித் தகுதி அதிகரித்தால், வேலைவாய்ப்பின்மையும் அதிகமாக உள்ளது.

English summary
India's unemployment rate in October rose to 8.5%, the highest since August 2016, and up from 7.2% in September, according to data released by the Centre for Monitoring Indian Economy (CMIE) on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X