பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் இலங்கைக்கு மேலும் ரூ7,500 கோடி கடனுதவி வழங்கியது இந்தியா
டெல்லி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கும் இலங்கைக்கு மேலும் ரூ7,500 கோடி கடனுதவி வழங்கியுள்ளது இந்தியா.
கொரோனா தொற்று நெருக்கடி காலத்தில் இலங்கையில் அன்னியசெலாவணி கையிருப்பு மோசமான சரிவை சந்தித்தது. தற்போது இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சமையல் எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலையும் இருக்கிறது. இலங்கையில் 1 கிலோ அரிசி விலை ரூ200 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முட்டையின் விலை தற்போது ரூ30க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் எண்ணெய் விலை 1 லிட்டர் ரூ900 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் பல லட்சம் பேர் பங்கேற்ற பிரமாண்ட போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் வன்முறையாகவும் வெடித்தது.

இந்நிலையில் இந்தியாவிடம் மீண்டும் மீண்டும் கடனுதவி கேட்டு வருகிறது இலங்கை. அந்நாட்டுக்கு கடந்த மாதம் ரூ3,750 கோடி கடன் உதவி வழங்கியது இந்தியா. இதனைத் தொடர்ந்து இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்சே மீண்டும் டெல்லி வருகை தந்தார். பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கடனுதவி குறித்து ஆலோசனை நடத்தினார் பசில் ராஜபக்சே. மேலும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் பசில் ராஜபக்சே சந்தித்தார்.
இந்த சந்திப்புகளை தொடர்ந்து இலங்கைக்கு ரூ7,500 கோடி கடனுதவி வழங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டைப் போக்க இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்கப்படும். இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications