டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் பிரதமர் மோடி தான் டாப்.. இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி : பஞ்சாப் தவிர அனைத்து தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி சிறந்த செயல்திறன் மதிப்பீடுகளைப் பெற்றுள்ளதாக இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைகளின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் , அம்மாநிலங்களில் தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து அம்மாநிலங்களில் தேர்தல் வேலைகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிடவை வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

 பத்மராஜன் மாதிரி.. உ.பி.யிலும் ஒரு தேர்தல் மன்னன்! 94வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த ஹஸ்னுராம்! பத்மராஜன் மாதிரி.. உ.பி.யிலும் ஒரு தேர்தல் மன்னன்! 94வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த ஹஸ்னுராம்!

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி


இந்நிலையில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தற்போது ஆளும் மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை பிடிக்கவும், ஆட்சியில் இல்லாத மாநில சட்டசபைகளை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியா டுடே நடத்திய மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி தேர்தல் நடத்தப்படவுள்ள 5 மாநிலங்களில் பஞ்சாப் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியா டுடே ஆய்வு

இந்தியா டுடே ஆய்வு

மூட் ஆஃப் தி நேஷன் என்பது இந்தியா டுடே குழுமத்தால் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் நாடு தழுவிய ஆய்வு ஆகும். மூட் ஆஃப் தி நேஷன் கணக்கெடுப்பின் முடிவுகள் பொதுவாக ஒவ்வொரு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்படும். மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பு என்பது மிகவும் முக்கியமான பிரச்சினைகளில் பொதுமக்களின் கருத்தை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் எனவும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, அரசியல், பொருளாதாரம், சமூகம், விளையாட்டு, சினிமா மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துகிறது. இந்நிலையில் தான் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் பஞ்சாப் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

பிரதமருக்கு வரவேற்பு

பிரதமருக்கு வரவேற்பு

உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் பிரதமர் மோடியின் செயல்பாடு 50 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பீடுகளைப் பெற்றுள்ளது என எனவும், பஞ்சாபில் மட்டும் 37 சதவீதம் ஆதரவு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி உத்தரபிரதேசத்தில் 75%,பஞ்சாப்பில் 37%, உத்தரகாண்ட்டில் 59%, மணிப்பூர் மாநிலத்தில் 73%, கோவாவில் 67 சதவீதம் பிரதமரின் செயல்பாடுகள் வரவேற்பை பெற்றுள்ளது.

தேர்தல்களில் எதிரொலிக்குமா?

தேர்தல்களில் எதிரொலிக்குமா?

உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இந்தியா டுடேவின் மூட் ஆஃப் தி நேஷன் எந்தத் தலைவர் சிறப்பாக செயல்பட்டார், யார் வெற்றி பெறவில்லை என்ற ஆய்வை நடத்திய நிலையில், கணக்கெடுப்பில் பிரதிபலிக்கும் மதிப்பீடுகள் நாடாளுமன்றத் தொகுதிகளுடனும் ஒத்துப்போகின்றன எனவும், மேலும் கருத்துக்கணிப்பின் முடிவுகள், ஐந்து மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவைக் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
According to a poll conducted by India Today, Prime Minister Narendra Modi has received excellent performance ratings in all the states where elections are being held except Punjab.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X