டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா சிகிச்சை.. அஸ்வகந்தா எந்தளவு பயன் தருகிறது.. ஆயுஷ் அமைச்சகம் நடத்தும் புதிய ஆய்வு

Google Oneindia Tamil News

டெல்லி: ஆயுஷ் அமைச்சகம் இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகத்துடன் இணைந்து, கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வர அஸ்வகந்தா எந்தளவுக்கு உதவுகிறது என்ற ஆய்வை நடத்தவுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளையும் பாடாய்ப்படுத்தி வருவது கொரோனா தொற்று தான். வல்லரசு நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

கொரோனா பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க வேக்சின் கண்டறியப்பட்டாலும்கூட கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க இதுவரை எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பாகப் பல கட்ட ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் இங்கிலாந்தின் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் (London School of Hygiene and Tropical Medicine) உடன் இணைந்து கொரோனா சிகிச்சையில் அஸ்வகந்தா எந்தளவு பயன் தருகிறது என்பது குறித்து சோதனை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

லண்டனில் நடக்கும் ஆய்வு

லண்டனில் நடக்கும் ஆய்வு

லண்டன், லெய்செஸ்டர், பர்மிங்காம் ஆகிய மூன்று நகரங்களிலுள்ள 2,000 பேரிடம் இந்த சோதனை நடைபெறவுள்ளது. இந்தியாவின் பாரம்பரிய மூலிகையான அஸ்வகந்தா மன அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்துகிறது. எளிதில் கிடைக்கூடிய இந்த அஸ்வகந்தா மூலிகை, ஏற்கனவே பிரிட்டன் நாட்டில் ஊட்டச்சத்தை அதிகப்படுத்த வழங்கப்படுகிறது. இந்த சோதனை மட்டும் வெற்றிகரமாக முடிந்தால் அது இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைக்கு மாபெரும் சாதனையாக அமையும்.

Array

Array

இது குறித்து லண்டன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சஞ்சய் கின்ரா கூறுகையில், "மூன்று மாதங்களுக்கு, 1000 பேருக்கு அஸ்வகந்தா மாத்திரைகளும் மற்றொரு 1000 பேருக்கு டம்மி மருந்துகளும் வழங்கப்படும். சோனையில் இருக்கும் காலகட்டத்தில் அவர்களின் உடல்நிலை, மனநிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும்" என்று அவர் கூறினார். மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் வெளிநாட்டை சேர்ந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறையாகும்.

கொரோனா நீண்ட கால அறிகுறிகள்

கொரோனா நீண்ட கால அறிகுறிகள்

சமீபத்தில் தான், மன அழுத்தத்தைக் குறைப்பது, தசை வலிமையை மேம்படுத்துவது, சோர்வைக் குறைப்பது ஆகியவற்றில் அஸ்வகந்தா பயன் தருகிறது என்பது இந்தியாவில் நடந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டது. ஆயுஷ் அமைச்சகத்தின் இந்த புதிய ஆய்வின் மூலம் கொரோனா தொற்றின் நீண்டகால அறிகுறிகளைக் குறைப்பதற்கான மருந்தாக அஸ்வகந்தா அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த சோதனைக்குப் பிறகு அஸ்வகந்தாவின் நோய் தடுக்கும் ஆற்றலை உலக நாடுகள் புரிந்துகொள்வார்கள் என ஆயுஷ் அமைச்சகத்தைச் சேர்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

English summary
AYUSH Ministry has collaborated with UK’s London School of Hygiene and Tropical Medicine (LSHTM) to conduct a study on Ashwagandha for promoting recovery from COVID-19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X