இதுதான் நாம்... வடக்கு சிக்கிமில் வழிதவறி விழிபிதுங்கிய சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவ வீரர்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் ஊடுருவி 5 இந்தியர்களை சீன ராணுவம் கடத்திச் சென்றுவிட்ட இந்த தருணத்தில் இப்படி ஒரு செய்தி.. வடக்கு சிக்கிமில் வழிதவறி தத்தளித்த 3 சீன நாட்டவர்களை காப்பாற்றி மருத்துவ உதவி அளித்து திருப்பி அனுப்பி இருக்கின்றனர் இந்திய ராணுவ வீரர்கள்.

Recommended Video

    Sikkim Border-ல் வழிதவறிய சீனர்களை காப்பாற்றிய Indian Army | Oneindia Tamil

    இமயமலை தொடங்கி மியான்மர் எல்லை வரை ஒவ்வொரு பகுதியிலும் இந்தியாவுடன் எப்போதும் மல்லுக்கு நிற்கிறது சீனா. லடாக்கில் ஊடுருவ இடைவிடாத முயற்சி... பூட்டான் பகுதியில் டோக்லாமை ஆக்கிரமிக்க முயற்சி.. அருணாசல பிரதேசம் எங்களுக்கு சொந்தம் என கொக்கரிப்பு.

    Indian Army rescued 3 Chinese nationals North Sikkim

    இத்தனைக்கும் சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் இந்த பேச்சுவார்த்தைகளைப் பற்றி எல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் ஊடுருவலையும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளையும் இடைவிடாமல் செய்கிறது சீனா.

    இப்போது அருணாசலப் பிரதேசத்தில் 5 இந்தியர்களை கடத்திச் சென்றிருக்கிறது சீனா ராணுவம். வழக்கம்போல தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்த இந்தியர்களை, இது எங்கள் பகுதி; அத்துமீறி நுழைந்துவிட்டீர்கள் என கூறி கடத்திச் சென்றிருக்கிறது சீனா. இதனால் இருநாடுகளிடையேயான பதற்றம் அதிகரித்திருக்கிறது.

    சீனாவின் இந்த அடாவடி டென்ஷன் ஓய்வதற்குள் இன்னொரு செய்தி வந்திருக்கிறது. வடக்கு சிக்கிம் பகுதியில் 17,000 அடி மலைப்பகுதியில் வழிதவறி தத்தளித்த 3 சீன நாட்டினரை இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் உள்ளிட்ட மருந்து உதவிகளையும் உடைகளையும் இந்திய ராணுவ வீரர்கள் வழங்கி உள்ளனர்.

    பின்னர் அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கும் பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கின்றனர் நமது ராணுவ வீரர்கள்.

    சல்யூட்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+