உலகின் மிக சிறந்த விஸ்கி.. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த இந்திய நிறுவனம்! ரேட் எவ்வளவு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்திய விஸ்கிகளுக்கு உலகளவில் மவுஸ் அதிகரித்து வருகிறது. உலகின் மிகச் சிறந்த மதுபானமாக இந்திய நிறுவனம் உருவெடுத்துள்ளது.

டெல்லி அருகே ஒரு காலத்தில் ஒயின் சேமிக்கப் பயன்படுத்தப்பட்ட ஓக் பீப்பாய்களில் இப்போது விஸ்கி சேமிக்கப்பட்டுள்ளன. தலைநகர் அருகே உள்ள இந்த தொழிற்சாலையில் ஒவ்வொரு நாளும் 10,000 பாட்டில்களில் இந்த சிங்கிள் மால்ட் விஸ்கி ரெடியாகி வருகிறது.

 Indian company is producing Worlds Best Whisky that Shakes Up Global Brands

உலகிலேயே மிக சிறந்த விஸ்கி வகையாக இது தான் பார்க்கப்படுகிறது. இந்திய நிறுவனம் இதில் முதல் இடம் பிடித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தான் ஏற்படுத்துகிறது.

விஸ்கி: இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில், உலகின் மிகச் சிறந்த விஸ்கியை இது தயாரிக்கிறது. ப்ரீமியம் ரேட்களில் விற்கப்படும் இந்த விஸ்கி இந்தியாவின் உயர் தட்டு வர்க்கத்தினர் இடையே பிரபலமடைந்து வருகிறது. இந்த மதுபான தொழிற்சாலையைச் சுற்றி கரும்பு மற்றும் கடுகு வயல்கள் இருக்கிறது. இதுவும் அதன் டேஸ்டை அதிகரிக்கிறது. இதற்கான டிமெண்ட் அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தியை அதற்கேற்றார் போல அதிகரிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியா விஸ்கியை வாங்குபவராக மட்டுமின்றி, ஒரு தயாரிப்பாளராகவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவின் சிறப்பு ஒற்றை மால்ட் விஸ்கி நாட்டின் ஸ்பிரிட் சந்தையை மொத்தமாக மாற்றுகிறது. இதன் மதிப்பு $33 பில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் மற்ற நாடுகள்: பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளில் இருந்து பல நிறுவனங்கள் விஸ்கி தயாரிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இந்த நாடுகளின் விஸ்கி வகைகளுக்குத் தான் உலகம் முழுவதும் மவுஸ் இருந்தது. ஆனால், இப்போது அந்த நாட்டு விஸ்கி வகைகளை பின்னுக்குத் தள்ளி இந்திய விஸ்கி டாப் இடத்திற்கு வந்துள்ளது. ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளில் பீர் வகைகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் விஸ்கி மது வகை தான் ஆதிக்கம் செலுத்துகிறது.

இப்போது உயர்தட்டு வர்க்கத்தினர் பலரும் இந்த விலையுயர்ந்த விஸ்கிக்கு வருகிறார்கள். இத்தனை காலம் வெளிநாட்டு மதுவைக் குடித்து வந்தவர்களும் இப்போது இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனராம்.

விலை எவ்வளவு: கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் மது குறித்த போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் ரூ. 34,960க்கு விற்கப்படும் இந்த மது வகை முதல் பரிசை பெற்றது. இதில் மது வகைகளுக்குப் புகழ் பெற்ற ஸ்காட்லாந்து மற்றும் பிரிட்டன் நாடுகளின் மது நிறுவனங்கள் கலந்து கொண்ட போதிலும், அவர்களை வீழ்த்தி இந்திய நிறுவனம் முதலிடம் பிடித்தது.

இந்திய நிறுவனத்தின் இந்த சிங்கிள் மால்ட் விஸ்கிகளுக்கு இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மவுசு அதிகரித்துள்ளது.. இதனால் வரும் காலத்தில் துபாய் உட்பட பிற நாடுகளிலும் மது விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 2021-22ஆம் ஆண்டில் இந்திய சிங்கிள் மால்ட் விஸ்கி விற்பனை 144 சதவீதம் உயர்ந்துள்ளது.. இதே நேரத்தில் ஸ்காட்ச் விஸ்கி விற்பனை 32 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.2027 வரையிலான காலகட்டத்தில், இந்திய மால்ட் விஸ்கி 13% வரை வளரும் என்று மதிப்பிடப்படுகிறது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் அசைக்கவே முடியாத இடத்தை நோக்கி இந்திய மது நிறுவனங்கள் சென்று வருவது உறுதியாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+