அரபிக்கடலில் கடத்தப்பட்ட கப்பல்.. காயத்துடன் மாலுமியை மீட்ட இந்திய கடற்படை.. நிலை என்ன? பகீர் தகவல்
டெல்லி: அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்து துப்பாக்கி குண்டு காயங்களுடன் மாலுமியை இந்திய கடற்படை மீட்டுள்ளது. சோமாலியா கடற்கரை நோக்கி செல்லும் கப்பலின் நகர்வை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
சர்வதேச அளவில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்வது. என வணிக நடைமுறைக்கு கப்பல் போக்குவரத்தே முதுகெலும்பாக உள்ளது. கப்பல் வணிகம் மட்டும் நிறுத்தப்பட்டால் ஒட்டுமொத்தமாக வணிகம் ஸ்தம்பித்துவிடும் என்றே சொல்லப்படுகிறது.

எனினும், கடலில் செல்லும் வர்த்தக கப்பல்களை கடற்கொள்ளையர்கள் கடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. சோமாலியா நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.
அதாவது, அரபிக்கடலில் சென்று கொண்டிருந்த மால்டா நாட்டின் கப்பலான எம்வி ருயன் என்ற கப்பல் ஆபத்தில் இருப்பதாக கடந்த 16 ஆம் தேதி அழைப்பு வந்தது. இந்த அவசர அழைப்புக்கு உடனடியாக இந்திய போர்க்கப்பல் ரெஸ்பான்ஸ் செய்தது. கடற்கொள்ளை தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படை ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் உடனடியாக அங்கே திருப்பி விடப்பட்டது. கப்பலின் நகர்வை இந்திய கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில், கடத்தப்பட்ட கப்பலில் உள்ள 18 மாலுமிகளில் ஒருவரை துப்பாக்கி குண்டு காயங்களுடன் இந்திய கடற்படை மீட்டுள்ளது பல்கேரியா நாட்டை சேர்ந்த மாலுமியை கடத்தல்கார்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்திய கடற்படை, மாலுமியை மீட்டு மேல் சிகிச்சைக்காக ஒமன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.
கடத்தல் காரர்களால் கடத்தப்பட்டுள்ள கப்பலுக்கு மேலே கடற்படையின் விமானம் பறந்து கொண்டிருப்பதாகவும், கப்பலின் நடமாட்டம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள இந்திய கடற்படை, தற்போது அந்த கப்பல் சோமாலிய கடற்கரையை நோக்கி செல்வதாகவும் தெரிவித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications