"சூப்பர் வேரியண்ட் கொரோனா.." பெரும் பீதி.. சரிந்த பங்குச் சந்தைகள்.. இந்தியாவில் சுகாதார உஷார் நிலை
டெல்லி: தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் B.1.1.529 கண்டறியப்பட்டதை அடுத்து இந்தியா முழுக்க உஷார்படுத்தப்பட்டுள்ளது. புதிய வகை அச்சத்தின் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் பெரும் இறக்கத்தை சந்தித்தன.
கண்காணிப்பை அதிகரிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா தவிர, ஹாங்காங்கிலும் பி.1.1.529 வேரியண்ட் பாதித்த நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
B.1.1529 வேரியண்ட் மிகவும் ஆபத்தானது. அதன் தாக்கம் பங்குச் சந்தையிலும் தெரிகிறது. இந்திய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் காலை 13.30 மணியளவில் 1,300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. அதே நேரத்தில், தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) நிஃப்டியும் 372 புள்ளிகள் சரிவைக் கண்டது.

ஆப்பிரிக்க நாடுகள் துண்டிக்கப்படுகின்றன
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞான வல்லுநர்கள் இந்த வேரியண்ட்டை ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர். இதனால் தான் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமானங்களின் இயக்கங்களை நிறுத்தும் பணி தொடங்கியுள்ளது. ஏழு ஆபிரிக்க நாடுகளுக்குச் செல்வதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் இஸ்ரேல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இஸ்ரேல், இங்கிலாந்து உஷார் நிலை
இஸ்ரேலிய அரசாங்கம் ஆப்பிரிக்கா, லெசெத்தோ, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், நமீபியா மற்றும் ஈஸ்வதினி போன்ற நாடுகளை சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. அதே நேரத்தில், இங்கிலாந்து ஆறு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பயணிகள் வர தடை விதித்துள்ளது. இந்த நாடுகளுக்கான அனைத்து விமானங்களையும் இங்கிலாந்து நிறுத்தியுள்ளது.

இந்தியா உஷார் நிலை
இந்தியாவும் உஷார் நிலையில் உள்ளது. அனைத்து சர்வதேச பயணிகளையும் தீவிர சோதனை நடத்துமாறு மத்திய அரசு மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக, தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங் மற்றும் போட்ஸ்வானாவிலிருந்து நேரடியாக வருபவர்களுக்கு அல்லது கடந்து செல்வோருக்கு கடுமையான சோதனைகள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால், மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள கடிதங்களில், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறியிருப்பதாவது: சர்வதேச பயணிகள் எங்கிருந்து வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். சோதனையில் பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்ட நபர்களின் மாதிரிகளை உடனடியாக ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும், இதனால் மரபணு வரிசைமுறை மூலம் வேரியண்ட் என்ன என்பதை கண்டறிய முடியும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள்
வியாழக்கிழமை வரை, நாட்டில் 120 கோடிக்கும் அதிகமான கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதை ட்வீட் செய்துள்ளார், "இதுவரை 120 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன, இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில், தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம் வலு பெற்றுள்ளது." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Recommended Video

தடுப்பூசி பலன் தருமா?
புதிய வேரியண்ட் கொரோனா தடுப்பூசியை பலனற்றதாக்க கூடும் என்று கூறப்படுகிறது. போட்ஸ்வானா வேரியண்ட் 32 வகையில் உருமாறக் கூடியது என்கிறார்கள். இது வைரஸின் மிகவும் வளர்ந்த வடிவமாகும், மேலும் அவை மிகவும் ஆபத்தானவை. இந்த 32 பிறழ்வுகளில், சில மிக வேகமாக பரவி, தடுப்பூசியின் பலனையும் தடுக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் கேஸ்களை சமாளிக்க லாக்டவுன் அல்லது ஊரடங்கு உத்தரவை விதிப்பதற்கு பதிலாக வயது வந்தோருக்கு கோவிட் எதிர்ப்பு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை வழங்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.

வேகமாக பரவக் கூடியது
சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, பி.1.1529 வேகமாக பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவேதான் பங்குச் சந்தைகளே சரியும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், லண்டன் இம்பீரியல் கல்லூரியின் வைரஸ் நிபுணர் டாக்டர் டாம் பீகாக் தனது ட்விட்டர் கணக்கில் வைரஸின் புதிய வேரியண்ட் பற்றிய தகவலை வெளியிட்டார். டெல்டா வேரியண்ட் உட்பட வேறு எந்த வேரியண்ட்டை விடவும் இது மோசமானதாக இருக்கும் என்று அவர் கூறினார். அப்போதிருந்து, விஞ்ஞானிகளின் பார்வை இந்த வேரியண்ட் மீது செல்ல தொடங்கியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications