Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தைவான் விவகாரம்.. இது நேரு, வாஜ்பாயின் முட்டாள்தனம்.. கடுமையாக விமர்சித்த சுப்பிரமணியசாமி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் பிரதமர்கள் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் முட்டாள் தனத்தால் தான் திபெத், தைவான் ஆகியவை சீனாவின் ஒருபகுதியாக நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Recommended Video

    Taiwan-ல் தற்போது என்ன நடக்கிறது? America-மீது கடும் கோபத்தில் China *World

    இது சீனாவுக்கு பிடிக்கவில்லை. சீனாவின் ஒரு பகுதியாக தைவான் உள்ளதாக சீனா கூறி வருகிறது. மேலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் கடும் தைவான் என்பது ஒருங்கிணைந்த சீனாவின் ஒரு பகுதியாக உள்ளது. இதற்கு தனி நாடு அங்கீகாரம் கொடுக்க கூடாது என கூறி வருகிறார்.

    இது சீனாவுக்கு பிடிக்கவில்லை. சீனாவின் ஒரு பகுதியாக தைவான் உள்ளதாக சீனா கூறி வருகிறது. மேலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் கடும் தைவான் என்பது ஒருங்கிணைந்த சீனாவின் ஒருபகுதியாக உள்ளது. இதற்கு தனி நாடு அங்கீகாரம் கொடுக்க கூடாது என கூறி வருகிறார்.

    சீனா சென்ற அமெரிக்க சபாநாயகர்

    சீனா சென்ற அமெரிக்க சபாநாயகர்

    இந்நிலையில் தான் அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுசி ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தைவான் செல்வதாக அறிவிக்கப்பட்டது. தனிநாடாக தைவான் இல்லாத நிலையில் இப்படி ஒரு நாட்டின் பிரதிநிதி செல்வது முறையல்ல என சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் நான்சி பெலுசி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதன்படி நேற்று மலேசியாவில் இருந்த நான்சி பெலோசி அமெரிக்க விமானப்படையில் விமானம் மூலம் தைவான் தலைநகர் தைபே நகருக்கு சென்றார்.

    திரண்ட் போர் மேகங்கள்

    திரண்ட் போர் மேகங்கள்

    சீனாவில் அச்சுறுத்தலுக்கு நடுவே அவர் தைவான் சென்றதால் இந்த பயணத்தை உலகமே உற்று நோக்கியது. நான்சி பெலோசி தைவான் எல்லையை நெருங்கிய நிலையில் சீனாவின் 21 போர் விமானங்கள் தைவான் வான் எல்லையில் பறந்தன. போருக்கு தயாராகும் வகையில் இந்த விமானங்கள் பறந்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே ஜப்பான் ராணுவ தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 13 அமெரிக்க விமானப்படை விமானங்கள் நான்சி பெலோசி பாதுகாப்பிற்காக தைபே நகரம் நோக்கி பறந்தன. இறுதியாக பாதுகாப்பாக அவர் தைவானில் உள்ளார். இதனால் போர் மேகங்கள் திரண்டதாக கருதப்பட்டது.

    தடைகளை விதிக்கும் சீனா

    தடைகளை விதிக்கும் சீனா

    இந்நிலையில் தான் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி சீனா எல்லைக்கட்டுப்பாட்டு கோடுகளை மீறி செயல்படுவதாக விமர்சித்த அதேவேளையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான நேரு, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் தற்போதைய பிரதமர் பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். இதுபற்றி சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

    சுப்பிரமணியசாமி விமர்சனம்

    சுப்பிரமணியசாமி விமர்சனம்

    இந்நிலையில் தான் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி சீனா எல்லைக்கட்டுக்காட்டு கோடுகளை மீறி செயல்படுவதாக விமர்சித்த அதேவேளையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான நேரு, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் தற்போதைய பிரதமர் பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். இதுபற்றி சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

    முட்டாள் தனமானது

    முட்டாள் தனமானது

    ‛‛ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் திபெத்தையும், தைவானையும் சீனாவின் ஒரு பகுதி என்று இந்தியர்களாகிய நாம் ஒப்புக்கொண்டுள்ளோம். ஆனால் இப்போது சீனா பரஸ்பரம் ஒப்புக்கொண்ட எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மதிக்கவில்லை. பிரதமர் மோடி "கோய் ஆயா நஹின்" என மயக்கத்தில் உள்ள நிலையில் லடாக்கின் சில பகுதிகளை சீனா கைப்பற்றியுள்ளது. தேர்தல் வந்தால் தான் நாம் முடிவுகள் எடுப்போம் என்பதை சீனா அறிந்து வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்று விமர்சனம் செய்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+