டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென அதிகரிக்கும் கொரோனா! இந்தியாவில் 4வது அலை சாத்தியமா? மாநிலங்களுக்கு பறந்த முக்கிய வார்னிங்!

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் ஜூன் மாதம் கொரோனா நான்காவது அலை தொடங்க வாய்ப்புள்ளதாக கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பல மாதங்களுக்கு முன்னரே தெரிவித்த நிலையில், தற்போது டெல்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் சரிவில் இருந்து கொரோனா 3வது அலையில் பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மும்பை போன்ற நகரங்களில் சிறிது சிறிதாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.

திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளில் 6 பேர் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளில் 6 பேர் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானா, மகராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக முதன்மை செயலாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் தற்போது கொரோனா சிறிது சிறிதாக அதிகரித்து வரும் சூழலில், ஜூன் 22ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24ஆம் தேதி வரை கொரோனா நான்காவது அலை பரவ வாய்ப்புள்ளதாக கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கடந்த பிபரவரி மாதமே தெரிவித்துள்ளனர். புதிய வகை கொரோனா மற்றும் தடுப்பூசி போட்டதன் விகிதம் உள்ளிட்டவை அடிப்படையிலேயே கொரோனா நான்காவது அலையின் தீவிரம் இருக்கும் எனவும் அவர்கள்குறிப்பிட்டிருந்தனர்.

கொரோனா 4வது அலை

கொரோனா 4வது அலை

குறிப்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கான்பூர் ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் மூன்றாவது முறையாக, கொரோனா அலையின் பாதிப்பை கணித்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலையின் போது இவர்களின் கணிப்பு கிட்டத்தட்ட சரியாக இருந்தது.

திடீரென அதிகரிப்பு

திடீரென அதிகரிப்பு

இந்நிலையில் கான்பூர் ஐஐடியின் கருத்தை பிரதிபலிக்கும் வகையிலேயே தற்போது கொரோனா பரவல் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இன்று 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படாத நிலையில் தற்போது 1446 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிபுணர்கள் அச்சம்

நிபுணர்கள் அச்சம்

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 4,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 745 ஆகவும், நேற்று 3 ஆயிரத்து 712 ஆகவும் இருந்தது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 68 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பாரவலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், 4வது அலை ஏற்படுமா என்ற அச்சம் ஏற்படுள்ளது.

English summary
Kanpur IIT researchers said months ago that a fourth wave of corona was likely to launch in India, but now the rising incidence of corona in several cities, including Delhi and Mumbai, has alarmed medical professionals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X