பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம்
டெல்லி: டெல்லி - வாஷிங்டன் இடையிலான ஆயில் டீல் இப்போது இந்தியாவின் மானப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
'யார் வீட்டுச் சொத்தை யார் யாருக்குக் கொடுப்பது?' என்கிற கதையாக மாறியிருக்கிறது அமெரிக்காவின் சமீபத்திய அறிவிப்பு. அதிபர் ட்ரம்ப்பின் எரிசக்தி கொள்கையினால் அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி உச்சத்தை எட்டியுள்ள நிலையில், திடீரென இந்தியாவுக்கு ஒரு 'சலுகையை' வாரி வழங்கியிருக்கிறது அமெரிக்க கருவூலத் துறை.

அது என்ன 30 நாள் கெடு?
கடலில் தவித்துக் கொண்டிருக்கும் ரஷ்ய எண்ணெயை மட்டும் இந்தியா வாங்கிக்கொள்ளலாம் என்றும், அதற்கு வெறும் 30 நாட்கள் மட்டுமே 'விலக்கு' (Waiver) அளிக்கப்படுவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா 'அனுமதிக்கிறது' (Allow) என்கிற வார்த்தைதான் இப்போது பற்றி எரிகிறது.
இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் எழுந்துள்ள காரசாரமான விமர்சனங்களின் தொகுப்பு இதோ:
79 ஆண்டுகால சுதந்திரம் எங்கே போனது? சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக, நாம் எதை வாங்க வேண்டும், யாரிடம் வாங்க வேண்டும் என்பதை மற்றொரு நாடு தீர்மானிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இது வெறும் வர்த்தகம் அல்ல, இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் எனப் பலரும் கொந்தளிக்கின்றனர்.
அமெரிக்கா 'அனுமதிக்கிறது' (Allow)
அடகு வைக்கப்பட்ட தேசம்: "மோடி அரசு நாட்டின் கௌரவத்தை மொத்தமாக அடகு வைத்துவிட்டது" என்கிற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து பலமாக எழுகிறது. அமெரிக்கா அனுமதி கொடுத்தால் தான் இந்தியாவுக்கு பெட்ரோல் கிடைக்குமா என்கிற கேள்வி சாமானிய மனிதனின் மனதிலும் எழுந்துள்ளது.
யார் இந்த அமெரிக்கா? இந்தியாவின் நீண்டகால நட்பு நாடான ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் என்ன? "யார் அமெரிக்கா நமக்கு 'அலௌ' (Allow) செய்ய?" என்கிற ஒற்றை கேள்வி இப்போது தேசபக்தியின் அடையாளமாக மாறிவிட்டது.
ட்ரம்ப்பின் கணக்கும்.. இந்தியாவின் நெருக்கடியும்..
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், சிபிஎம் எம்பி சு வெங்கடேசன், ஆகியோர் ரஷ்ய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு 30 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க அரசு. நாம் எங்கே, எதை, எத்தனை நாட்களுக்கு வாங்க வேண்டுமென அமெரிக்கா தீர்மானிக்கிறது. தேசத்தை நிரந்தரமாகவே அடகுவைத்துள்ள மோடி அரசு வரலாற்றின் வெட்கக்கேடு. என்று விமர்சனங்களை வைத்துள்ளனர்.
ஈரான் உலக எரிசக்தி சந்தையை முடக்கப் பார்ப்பதாகக் கூறி, அதற்கு மாற்றாக அமெரிக்க எண்ணெயை இந்தியா அதிக அளவில் வாங்க வேண்டும் என்று அமெரிக்கா மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறது. "நாங்கள் 30 நாள் டைம் தருகிறோம், அதற்குள் ரஷ்ய எண்ணெயை ஓரங்கட்டிவிட்டு எங்களிடம் வாருங்கள்" என்பதே வாஷிங்டனின் 'டீல்'.
ஆனால், இது இந்தியாவை ஒரு 'வாடிக்கையாளர்' போல நடத்தாமல், ஒரு 'அடிமை நாடு' போல நடத்துவதாக இருக்கிறது என்பதே நடுநிலையாளர்களின் வருத்தம். வல்லரசு கனவில் இருக்கும் இந்தியாவுக்கு, இது ஒரு ராஜதந்திர சறுக்கலா அல்லது நிர்ப்பந்தமா?
"இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய யாரோ ஒருவரிடம் கையேந்தும் நிலை என்பது நமது வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு."
அமெரிக்காவின் இந்தத் தற்காலிக சலுகை, இந்தியாவின் நீண்டகாலப் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதிக்குமா அல்லது மோடி அரசு இதற்குப் பதிலடியாக என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இப்போதைக்கு இந்தியாவுக்குத் தேவை பெட்ரோல் மட்டுமல்ல... சுயமரியாதையும் தான்!
-
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம்












Click it and Unblock the Notifications