துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு.. பதவிப்பிரமாணம் செய்துவைத்த ஜனாதிபதி திரெளபதி முர்மு!
டெல்லி: நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவி ஏற்றுள்ளார்.
Recommended Video
அண்மையில் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து புதிய குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்கர் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா போட்டியிட்டார்.

ஜெகதீப் தங்கர் வெற்றி
இந்தத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 725 பேர் வாக்களித்தனர். 92.94 சதவிகித வாக்குகள் பதிவாகின. அதில் பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும், மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்றனர். 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

வாழ்த்து
இதனைத்தொடர்ந்து நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ள ஜெகதீப் தங்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த வெங்கையா நாயுடுவின் பிரிவு உபசார விழா, விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இன்று பதவியேற்பு
இந்த நிலையில் நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றுள்ளார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

யார் இந்த ஜெகதீப் தங்கர்?
வழக்கறிஞர் ஜெகதீப் தங்கர் பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர். 1989ம் ஆண்டு முதல் முறையாக ஜுன்ஜுஹுனு லோக்சபாவுக்கு போட்டியிட்டு தேர்வானார். அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இரு ஆண்டுகள் வரை மட்டும் அமைச்சராக இருந்த ஜெகதீப் தங்கர், 1993ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
பின்னர் கடந்த 2019ம் ஆண்டு மேற்கு வங்க மாநில ஆளுநராக ஜெகதீப் தன்கரை நியமித்து அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி - ஜெகதீப் தங்கர் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கடந்த 2019ம் ஆண்டு மேற்கு வங்க மாநில ஆளுநராக ஜெகதீப் தன்கரை நியமித்து அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி - ஜெகதீப் தங்கர் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications