ஆப்கன் வீழ்ந்த உற்சாகம்: காஷ்மீருக்கு குறி வைக்கும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள்- வெளியான ஷாக் தகவல்
டெல்லி: தாலிபான்களால் ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சுமார் 100 ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஎம்) உறுப்பினர்கள் மீண்டும் தங்கள் பயங்கரவாத இயக்கத்தோடு இணைந்துள்ளனர்.
மேலும் இந்த தீவிரவாத அமைப்பு இந்தியாவில், அதிலும், குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் வெற்றியைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் தாக்குதலுக்குத் தயாராகுங்கள் என்று தீவிரவாதிகளுக்கு இந்த, அமைப்புத் தலைவர் மசூத் அசார் உத்தரவிட்டுள்ளதாக, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் வெற்றியால் வெறி
"ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் தாலிபானின் மூத்த நிர்வாகிகள் ஏற்கனவே ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளனர். இந்தியாவை இலக்காகக் கொண்டு செயல்படுவதற்கு அனைத்து ஆதரவும் அளிக்கப்படும் என்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு, அப்போது உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாகிஸ்தான் படையினரை ஊக்குவிக்கும், எனவே அவர்கள் எல்லையில் தாக்குதல் நடத்தக் கூடும். இது பயங்கரவாதிகளின் ஊடுருவலை எளிதாக்கும், " என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

பாதுகாப்பு படைகள் அதிரடி
பாதுகாப்புப் படைகள் இந்த ஆண்டு இதுவரை ஜம்மு காஷ்மீரில் பல ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். பாகிஸ்தானின் இரண்டு முக்கிய தளபதிகளான முகமது இஸ்மாயில் மற்றும் அப்துல் ரஷித் காஜி ஆகியோர் ஜூலை 31 அன்று புல்வாமாவில் உள்ள டிரால் பகுதியில் உள்ள ஹங்கல்மார்க் காட்டில் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 14, 2019 அன்று புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு இவர்கள் மூளையாக செயல்பட்டவர்கள்.

பின்னடைவு
இஸ்மாயில் மற்றும் காஜி ஆகியோர் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு பல உள்ளூர் இளைஞர்களை நியமித்தனர். "பாதுகாப்புப் படையினரால் அவர்கள் கொல்லப்பட்டது காஷ்மீரில் அவர்களுடைய நடவடிக்கைகளுக்கு பின்னடைவாக இருந்தது. இருப்பினும், ஆப்கானிஸ்தானின் சமீபத்திய வெற்றிகள், தீவிரவாதிகளை மீண்டும் உற்சாகப்படுத்தியுள்ளன, " என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
Recommended Video

ஐ.நா. தடை
அல்கொய்தா மற்றும் தலிபான்களுடனான தொடர்புகள், நிதியுதவி, ஆயுதங்களை வழங்குதல், திட்டமிடுதல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை ஒருங்கிணைத்தல் ஆகிய குற்றங்களுக்காக, 2001, அக்டோபர் 17ம் தேதி முதல், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலால் ஜெய்ஷ்-இ-முகமது தடை செய்யப்பட்டது. மசூத் அசார் ஒரு ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதியாகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications