பாஜகவுக்கு விரைவில் கெட்ட காலம்... சாபம் விட்ட ஐஸ்வர்யா ராயின் மாமியார்..!?
டெல்லி: பிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய் பச்சனிடம் பனாமா பேப்பர் வழக்கு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அவரது மாமியாரான ஜெயாபச்சன் நாடாளுமன்றத்தில் பாஜவுக்கு கெட்ட நாட்கள் விரைவில் தொடங்கும் என அமைதியை இழந்து ஆவேசமாக பேசினார்..
பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனின் மனைவி, பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் தாயார், பிரபல நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராயின் மாமியாருமான ஜெயாபச்சன் சமாஜ்வாதி கட்சியில் எம்பியாக உள்ளார்.
இந்திய அளவில் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் , அரசியலில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள ஜெயா பச்சன் நாடாளுமன்றத்திலும் சரி வெளியிலும் சரி பாஜவுக்கு எதிராக தனது கடும் வாதங்களை முன்வைத்து வருபவர். அதிரடியான அரசியல்வாதியாக இல்லையென்றாலும் அறிவுப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்பவர் ஜெயாபச்சன்.

பனாமா பேப்பர்ஸ் வழக்கு
இந்நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஜெயாபச்சன் தனது அமைதியை இழந்து ஆவேசமாக பேசிய பேச்சுதான் நாடாளுமன்ரத்திலும் அனைத்து ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் பல்வேறு துறைசார்ந்த பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய், அவரது மாமனாரும் பாலிவுட் மெகாஸ்டாருமாகிய அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்களும் இடம் பெற்றன.

அமலாக்கதுறை விசாரணை
இந்த அடிப்படையில் இந்திய அமலாக்கத் துறையும் 2017ஆம் ஆண்டு முதல் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாராய் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அமலாக்கத் துறை இயக்குனரகம் மீண்டும் சம்மன் அனுப்பியது இதையடுத்து ஐஸ்வர்யாராய் இன்று டெல்லி அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஜெயாபச்சன் ஆவேசம்
இந்த நிலையில்தான் நாடாளுமன்றத்தில் தனது கட்டுப்பாட்டையும் அமைதியையும் இழந்த ஜெயாபச்சன், பாஜகவின் கெட்ட நாட்கள் விரைவில் ஆரம்பிக்கப்போகிறது என ஆவேசமாக கூறியுள்ளார். இன்று ராஜ்யசபாவில் பேசிய ஜெயாபச்சன் ஆளும் பாஜகவை கடுமையாக சாடினார். உங்களுக்கு கெட்ட நாட்கள் மிக விரைவில் வரப்போகிறது என்றதோடு, மிகவும் கோபமாக காணப்பட்ட அவர், தான் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டதாக கூறினார்.

விரைவில் மோசமான நாட்கள்
மேலும், உங்களுக்கு மோசமான நாட்கள் வரும் என்று நான் உங்களை சபிக்கிறேன். நீங்கள் எங்களை கழுத்தை நெரிக்கிறீர்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? யாரை முன்னிறுத்தி விளையாடுகிறீர்கள் என்று ஆவேசமாக ஜெயா பச்சன் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications