மதஉணர்வை தூண்டியதாக கூறி பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது! டெல்லி போலீஸ் நடவடிக்கை
டெல்லி: மத உணர்வை தூண்டியதாக கூறி டெல்லியில் சிறப்பு பிரிவு போலீசாரால் பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Alt News நிறுவனங்களில் ஒருவர் முகமது ஜுபைர். பத்திரிகையாளரான இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக உள்ளார். இவர் மதம்சார்ந்த விஷயங்கள் பற்றி தொடர்ச்சியாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இவர் மதம்சார்ந்த சிலரது நம்பிக்கைகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் இன்று திடீரென்று டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் ஜுபைரை கைது செய்தனர். இவர் மீது டெல்லி போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 (கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் செயல்படுதல்), 295A (மத உணர்வுகளை தூண்டி சமூக அமைதியை சீர்குலைப்பது) ஆகியவற்றின் கீழ் ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபத்து நெருங்குது! மக்களே உஷார்! தமிழகத்தில் தொடர்ந்து 5வது நாளாக 1000யை கடந்த கொரோனா பாதிப்பு!
இதையடுத்து அவரை போலீசார் பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இதுபற்றி டெல்லி போலீசார் கூறுகையில், ‛‛டெல்லி போலீசாரின் உளவுத்துறை மற்றும் ஐஎப்எஸ்ஓ சிறப்பு பிரிவு சார்பில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள ட்வீட்களை அப்படியே பாதுகாக்க வேண்டும் என கடிதம் எழுதப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
****