பேராபத்துல இருக்காங்க.. காஷ்மீர் பண்டிட் மக்களை பாதுகாக்க வேண்டும்! கங்கணம் கட்டி களமிறங்கிய கங்கனா!
டெல்லி : தீவிரவாதிகள் அச்சுறுத்தல் மற்றும் தொடர் படுகொலைகளால் காஷ்மீரில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட் இன மக்கள் போராடி வரும் நிலையில், காஷ்மீர் பண்டிட் சமூக மக்களை நாம் காக்க வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த போது அங்கு பாரம்பரியமாக வசித்து வந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்திற்கு எதிராக பெரும் வன்முறை தாக்குதலை காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகள் மேற்கொண்டனர்.
இந்திய வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதை அடுத்து உயிர் பிழைப்பதற்காக அண்டை மாநிலங்களுக்கு தப்பிச்சென்று அகதிகளாக மாறினர்.

காஷ்மீர் பண்டிட்டுகள்
இந்திய வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதையடுத்து உயிர் பிழைப்பதற்காக அண்டை மாநிலங்களுக்கு தப்பிச்சென்று அகதிகளாக மாறினர். இதனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தி காஷ்மீர் பயிற்சி படம் கூட தற்போது பெரிய அளவில் பேசப்பட்டது.

மீண்டும் குடியமர்த்தல்
இது ஒருபுறம் இருந்தாலும் ஜம்மு காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் அவர்களது தாய் மண்ணில் குடியமர்த்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது அதன்படி ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் தற்போது மீண்டும் தங்களது தாய் மண்ணில் குடியேறி வருகின்றனர் அவர்களின் பாதுகாப்புக்காக குடியிருப்புகளில் பாதுகாப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது

தீவிரவாதிகள் தாக்குதல்
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் காஷ்மீரில் மீண்டும் பண்டிட்டுகளுக்கு எதிரான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து காஷ்மீர் பண்டிட் ஒருவரை 2 பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற பயங்கர சம்பவம் நடந்தது. இதேபோல் வங்கி மேலாளர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் காஷ்மீர் பண்டிட் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கங்கனா ரனாவத் ஆதரவு
இந்நிலையில் பண்டிட் சமூக மக்களை நாம் காக்க வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் கூறியுள்ளார். பிரபல செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-யின் செய்தி ஒன்றினை ரியாக்ட் செய்துள்ள கங்கபா, அந்த செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில் ஸ்டோரியாக ஷேர் செய்துள்ளார். தற்போது மட்டுமல்ல காஷ்மீர் பண்டிட்களுக்கு ஆதரவாக கங்கனா தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications