டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடங்காத கங்கனா ரனாவத்.. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் சர்ச்சை கருத்து.. வறுக்கும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையான பிரச்சினைகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அங்கு பாஜகவினருக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் நடப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார் கங்கனா ரனாவத்.

Kangana Ranaut trolled by netizens for sensitive posts on Israel Palestine crisis

பதிவுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவரது டுவிட்டர் பக்கத்தை முழுமையாக முடக்கி வைத்துள்ளது டுவிட்டர் நிர்வாகம்.

இதையடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துக்களை கூறுவதாக சொல்லிக்கொண்டு சர்ச்சை விஷயங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் கங்கனா. இதுவரை உள்ளூர் பிரச்சனைகளில் நியாயம் பேசி வந்த கங்கனா ரனாவத், தற்போது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை அதாவது சர்வதேச விவகாரங்களிலும் தனது கருத்தைக் கூறுகிறேன் பேர்வழி என்ற பெயரில் மோசமான கருத்துகளையும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் கூறி நெட்டிசன்களிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதல் பற்றி கருத்து தெரிவித்துள்ள கங்கனா ரனாவத் , தீவிரவாதத்தை வெறுமனே போராட்டம், தர்ணா மூலமாக முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியும் என்று நம்புபவர்கள் இஸ்ரேலிடம் இருந்து பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். தங்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்காக எவ்வாறு அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

துரோகம்.. எங்கள் முதுகில் குத்திவிட்டனர்.. இஸ்ரேல் உடன் யு.ஏ.இ ஒப்பந்தம்.. பாலஸ்தீனம் பாய்ச்சல்! துரோகம்.. எங்கள் முதுகில் குத்திவிட்டனர்.. இஸ்ரேல் உடன் யு.ஏ.இ ஒப்பந்தம்.. பாலஸ்தீனம் பாய்ச்சல்!

இந்த கருத்துக்களுக்கு அதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்னூட்டங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லை ட்விட்டர் மூலமாகவும் பல்வேறு நெட்டிசன்கள் கங்கனா ரனாவத்தின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ரமலான் மாதத்தில் ஒரு மசூதியில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 300 முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. நிராயுதபாணியாக ஆயுதங்கள் எதுவுமில்லாமல் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் காயமடைந்துள்ளனர். இதுதான் தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதலா என்று நெட்டிசன் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    Israel-Gaza பகுதிகள் Google Maps-ல் மங்கலாக இருக்க என்ன காரணம்?

    ட்விட்டர் பக்கத்தில் இன்ஸ்டாகிராமை டேக் செய்த ஒரு நெட்டிசன், இவர் கருத்தில் உங்களுக்கு ஒப்புதல் இருக்கிறதா. உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி வருகிறார். எனவே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் . ஏற்கனவே டுவிட்டரை இழந்த கங்கனா ரணாவத் மீண்டும் இன்ஸ்டாகிராமை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Bollywood actress Kangna Ranaut comes under attack from the netizens once again but this time in Instagram. The actress turned BJP supporter blaming Palestine for conflict over Israel but the netizens says this is not true story. Israel is attacking innocent people living in Palestine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X