டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவா இதெல்லாம் ஒரு பேரா? .. இந்த "அடிமை பெயரை" தூக்கிட்டு "பாரத்"னு வைங்க.. கங்கனா அதகளம்!

Google Oneindia Tamil News

டெல்லி: நம் நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று மாற்ற வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார். இதற்கு கண்டனங்கள் குவிந்துள்ளன.

கங்கனா ரனாவத் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். விவசாயிகள் பிரச்சினை முதற்கொண்டு அனைத்தையும் கேலி செய்து நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.

அந்த வகையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது இந்தியா என்ற பெயர் அடிமையின் பெயராம். அதை பாரத் என மாற்ற வேண்டுமாம்.

தீபாவளி வரை ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியம்.. 80 கோடி மக்களுக்கு பலன்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல் தீபாவளி வரை ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியம்.. 80 கோடி மக்களுக்கு பலன்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ட்விட்டர் பக்கம்

ட்விட்டர் பக்கம்

இதுகுறித்து கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறுகையில், இந்தியா என்ற பெயர் அடிமை பெயராகவே உள்ளது. இதை மாற்றி பழைய பெயரான பாரத் என்பதையே வைக்க வேண்டும். இந்தியா அதன் பண்டைய ஆன்மீகம் மற்றும் ஞானத்தில் வேரூன்றியிருந்தால் மட்டுமே உயரத்தை அடையலாம்.

வேதங்கள்

வேதங்கள்

நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும் வேதங்கள், பகவத் கீதை மற்றும் யோகாவில் ஆழமாக நாம் வேரூன்றி இருந்தால் உலகின் மிகப் பெரிய நாடாக வெளிப்படுவோம். எனவே இந்த அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என மாற்ற முடியுமா?

ஆங்கிலேயர்கள்

ஆங்கிலேயர்கள்

இந்த பெயரை ஆங்கிலேயர்கள் நமக்கு கொடுத்தனர். சிந்து நதியின் கிழக்கு பகுதியை குறிக்கும் வகையில் இந்த பெயர் நமக்கு தரப்பட்டது. இப்படியெல்லாமா பெயர் வைப்பது? உங்கள் குழந்தைக்கு சின்னமூக்கு, 2ஆவதாக பிறந்த குழந்தை, சிசேரியன் மூலம் பிறந்த குழந்தை என்றெல்லாம் பெயர் வைக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மையான மாற்றம்

உண்மையான மாற்றம்

இதை நெட்டிசன்கள் கண்டித்துள்ளார்கள். பெயரை மாற்றினால் உண்மையான மாற்றம் வராது. இந்தியா என்ற பெயர் கங்கனா சொன்னது போல் சிந்து நதியிலிருந்து பிறந்ததுதான். ஆனால் இந்தியா என்ற பெயரை ஆங்கிலேயர்கள் வைத்தார்கள் என சொல்வது தவறானது என நெட்டிசன்கள் பதில் அளித்துள்ளார்.

English summary
Actress Kangana Ranaut wants India to be changed as Bharat, as the former is slave name.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X