டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 நாட்களில் ஒன்றும் உலகம் தலைகீழாகிவிடப்போவதில்லை.. கபில் சிபல் வாதம்

Google Oneindia Tamil News

டெல்லி: 3 நாட்களில் ஒன்றும் உலகம் தலைகீழாகிவிடப்போவதில்லை என ப.சிதம்பரம் வழக்கில் கபில் சிபல் வாதம் செய்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முறைகேடு செய்ததாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டப்பட்டார். பின்னர் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Kapil Sipal argues that within 3 days world could not be overturned

அவர் 14 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். அவரது சிபிஐ காவல் இன்றுடன் முடிந்தது. இந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிராக சிதம்பரம் தரப்பு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அயோத்தி வழக்கு: கொலை மிரட்டல் விடுத்த சென்னை நபருக்கு எதிரான அவதூறு மனு மீது நாளை விசாரணைஅயோத்தி வழக்கு: கொலை மிரட்டல் விடுத்த சென்னை நபருக்கு எதிரான அவதூறு மனு மீது நாளை விசாரணை

அப்போது ப. சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தன் தரப்பு வாதத்தை முன் வைத்தார். அப்போது அவர் கூறுகையில் ப. சிதம்பரத்தை வீட்டுக் காவலுக்கு அனுப்புங்கள். அமலாக்கத் துறை வழக்கில் முன்ஜாமீன் தொடர்பாக வெள்ளிக்கிழமை தீர்ப்பு வருகிறது.

எனவே இந்த 3 நாட்களுக்கு ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுங்கள். இல்லாவிட்டால் கடும் நிபந்தனைகளுடன் வீட்டுக்காவலில் வையுங்கள். வெறும் 3 நாட்கள்தான் கேட்கிறேன். இந்த 3 நாட்களில் உலகம் ஒன்றும் தலைகீழாக மாறிவிடாது என கபில் சிபல் வாதம் செய்தார்.

English summary
Kapil Sipal argues that 3 days more to hear P.Chidambaram's bail plea. Within these period world could not be overturned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X