வைரலான பிரதமர் மோடி படம்.. 2 ட்வீட் போட்டு பங்கமாய் கலாய்த்த ஜோதிமணி எம்.பி.. எகிறிய நெட்டிசன்கள்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
Recommended Video
அமெரிக்க துணை அதிபரும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

மோடி அமெரிக்கா பயணம்
குவாட் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுஹா ஆகியோரை பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேசினார் மோடி. இதேபோல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து பேசுகிறார். மேலும்,. ஐ.நா பொதுச்சபையிலும் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். பிரதமர் மோடியின் இந்த பயணம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.

வைரலான பிரதமர் படம்
முன்னதாக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக அமெரிக்கா புறப்பட்டுச் அரசின் முக்கிய கோப்புகளை அவர் பார்வையிட்டார். ''மிக நீண்ட பயணத்தின் போது அதை வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று பிரதமர் இந்த படத்துடன் ட்வீட் ஒன்று போட, இந்த படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த படம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஏன் இந்த விளம்பரம்?
'இந்த பணி பிரதமரின் பொறுப்புதானே. அதுவும் கோப்பு அடியிலிருந்து செல்போன் ஒளி வீசுகிறது, மோடி கையிலுள்ள கோப்பு இடது பக்கம் இருக்கிறது. ஏன் இந்த விளம்பரம்' என்று எதிர் கருத்துக்களும், 'விமான பயணத்தின்போது கூட நேரத்தை வீணாக்காமல் வேலை செய்கிறார். இவர்தான் பிரதமர்' என்று ஆதரவு கருத்துக்களும் இணையத்தில் உலா வந்தன. இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த புகைப்படம் தொடர்பாக காங்கிரசை சேர்ந்த கரூர் எம்.பி ஜோதிமணியும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜோதிமணி கிண்டல்
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' இந்தியாவின் அனைத்து பிரதமர்களும் விமானத்தில் வேலை செய்வார்கள். ஆனால் மோடி மட்டுமே காகிதத்தின் கீழ் வெளிச்சம் வைத்து அதை ஒரு விளம்பர நிகழ்வாக ஆக்குவார்'' என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். அதாவது இந்திய முன்னாள் பிரதமர்கள் ஜவர்ஹலால் நேரு, நரசிம்ம ராவ், ராஜிவ் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் விமானத்தில் அரசு தொடர்பான வேலைகளை செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட ஜோதிமணி, மோடியின் படத்தை இவற்றுடன் ஒப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியாவின் சாம்பியன் யார்?
மேலும், ஜோதி மணி வெளியிட்ட மற்றோரு டுவிட்டர் பதிவில், ' டிஜிட்டல் இந்தியாவின் சாம்பியன் யார்? 1980-களின் இந்த மனிதரா? அல்லது 2021?'' என்று கூறியுள்ளார். அதாவது 1980-ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி விமானத்தில் கணினியை பார்ப்பது போலவும், தற்போது 2021-ல் பிரதமர் மோடி கோப்புகளை பார்பபது பலவும் உள்ள படத்தை பகிந்துள்ள அவர் இதுதான் டிஜிட்டல் இந்தியாவா? என்று மோடியை கிண்டல் செய்துள்ளார்.
|
நெட்டிசன்கள் கேள்வி
ஜோதிமணி பகிர்ந்துள்ள இந்த படத்துக்கு கீழே நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகினறனர். '1980ல் லேப்டாப் விண்டோஸ் எதுவுமே கிடையாது. சும்மா அடிச்சு விடக்கூடாது' என்று ஒரு நெட்டிசன் கேட்டுள்ளார். இந்தியாவில் கணினி தயாரிப்பு 1991 வருடம் என்று ராஜிவ் காந்திக்கு தெறியுமா? என்று வேறு ஒரு நெட்டிசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications