உச்சி வானில் உச்ச போதையில் உச்சா.. விமானத்தை நாறடித்த மிஸ்ரா! காஷ்மீர் பைல்ஸ் இயக்குநரின் ட்வீட்
டெல்லி: நியூயார்க் நகரத்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற நபர் 70 வயது மூதாட்டி மீது போதையில் சிறுநீர் கழித்ததற்காக போலீசார் கைது செய்து இருக்கும் நிலையில் ட்விட்டரில் காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இது தொடர்பாக கருத்திட்டு இருக்கிறார்.
கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் இந்த விமானத்தில் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா (வயது 34) என்பவர் பயணித்தார்.
இதே விமானத்தில் 70 வயது மூதாட்டி ஒருவரும் பயணம் செய்தார். இந்த நிலையில் உச்சக்கட்ட போதையில் இருந்த சங்கர் மிஸ்ரா அருகில் உறக்கத்தில் இருந்த அந்த மூதாட்டி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்து இருக்கிறது.

மூதாட்டி புகார்
கண் விழித்து பார்த்தபோது சங்கர் மிஸ்ராவின் செயலை கண்டு அதிர்ச்சியடைத்த மூதாட்டி விமான பணியாளர்களிடமும், ஏர் இந்தியா நிறுவனத்திடமும் புகாரளித்து இருக்கிறார். ஆனால் அந்த சங்கர் மிஸ்ரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததாக் வேதனை அடைந்த மூதாட்டி ஏர் இந்தியா இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

போலீஸ் வழக்கு
நவம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியானவுடன் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனமும் சங்கர் மிஸ்ரா 30 நாட்களுக்கு விமானத்தில் பயணிக்க தடை விதித்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.

பெங்களூருவில் கைது
இதனை அடுத்து சங்கர் மிஸ்ரா தலைமறைவான நிலையில் அவர் பிற நாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருந்த சங்கர் மிஸ்ராவை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட மிஸ்ராவுக்கு 32 வயதாகிறது.

பத்திரிகையாளர் கருத்து
நியூயார்க்கில் உள்ள வெல்ஸ் பார்கொ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சங்கர் மிஸ்ராவை இதன் காரணமாக பணி நீக்கம் செய்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரபல ஆங்கில தொலைக்காட்சி நெறியாளர் சங்கர் மிஸ்ரா கைது தொடர்பாக ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார். அதில் "விமானத்தில் இந்த செயலை செய்தவர் மிஸ்ரா. அவரது பெயரை கானாக இருந்தால் என்ன செய்வது. யாராக இருந்தாலும் சட்டப்படி ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர்
இதற்கு பதிலளித்த காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, "சட்டம் அனைவருக்கும் சமமானதுதான். அது அர்ஃபாவாக இருந்தாலும், ராஜ்தீபாக இருந்தாலும் சரி. ஊடகங்கள்தான் பாகுபாடு காட்டுகின்றன. ஒருவேளை அது கானாக இருந்திருந்தால் நீங்கள் அவரை பாதிக்கப்பட்டவராக காட்டி இருப்பீர்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்." என்று பதிவிட்டு உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications