டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய பட்ஜெட் ... எந்தெந்த துறைகளில் என்ன அறிவிப்பு... முக்கிய அம்சங்கள்... இதை படிங்க!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

Key Features in 2021-22 Gneral Budget

சுகாதாரத்துறை

  • ரூ.64,180 கோடியில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் தொடங்கப்படும்
  • கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு
  • இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்
  • கொரோனா பரவலை தடுக்க ஜிடிபியில் 13% நிதி ஒதுக்கீடு
  • கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுகாதார துறைக்கு 137% கூடுதல் நிதி ஒதுக்கீடு
  • ரூ.1.41 லட்சம் கோடி செலவில் நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படும்
  • நாடு முழுவதும் ஊட்டச்சத்து மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
  • 116 மாவட்டங்களில் இரண்டாம் ஊட்டச்சத்து இயக்கம் செயல்படுத்தப்படும்.

வருமான வரித்துறை

  • வருமான வரி அடுக்கு விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
  • 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை.
  • கார்ப்பரேட் வரிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை
  • 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
  • வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடிக்க நவீன தொழில் நுட்ப வசதி பயன்படுத்தப்படும்
  • குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு 2022-ம் ஆண்டு வரை வரிச்சலுகை வழங்கப்படும்
  • பங்குச்சந்தைகளை ஒழுங்குப்படுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டம் உருவாக்கப்படும்

சாலை மேம்பாட்டு திட்டங்கள்

  • 2022-ம் ஆண்டுக்குள் 8,500 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
  • 11,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்
  • தமிழகத்தில் ரூ 1.03 லட்சம் கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் அமைக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் 3,500 கி.மீ நீளத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும்.
  • கன்னியாகுமரி - கேரளா பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலை

ரெயில்வே துறை

  • ரெயில்வே துறைக்கு ரூ1.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
  • சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபப்டும்.
  • சென்னையில் 118 கி.மீ தொலைவுக்கு 2-ம் கட்ட மெட்ரோ திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்
  • ரெயில்வே துறையில் சிறப்பு வழித்தடங்கள் உருவாக்கப்படும்
  • மும்பை - குமரி இடையே புதிய வழித்தடம் அமைக்க திட்டம்
  • பிரத்யேக சரக்கு ரயில் பாதை திட்டங்கள் அடுத்தாண்டு ஜூன்22ல் முடிவடையும்
  • 27 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்

வேலைவாய்ப்பு தொழில்கள் துறை

  • சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்
  • பெண்கள் இரவு நேர பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
  • புலம்பெயர்ந்த மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க தனி இணையதளம் உருவாக்கப்படும்
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மலிவான வாடகையில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்
  • 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப்பூங்காக்கள் துவங்கப்படும்.

கல்வித்துறை

  • நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும்.
  • நாடு முழுவதும் 15,000 பள்ளிகள் தரம் மேம்படுத்தப்படும்
  • தேசிய மொழிகளை மொழிபெயர்ர்க்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
  • லடாக்கில் உள்ள லே பகுதியில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
  • 750 ஏகலைவா மாதிரி பள்ளிகள் நாடு முழுவதும் அமைக்கப்படும்
  • 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவ ரூ35,219 கோடி ஒதுக்கீடு

பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.5, டீசல் மீது ரூ.4 'செஸ்' போட்ட அரசு.. விண்ணை தொடப்போகிறது விலை பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.5, டீசல் மீது ரூ.4 'செஸ்' போட்ட அரசு.. விண்ணை தொடப்போகிறது விலை

விவசாயிகள், வேளாண்மை

  • நடப்பாண்டில் ரூ.1.72 லட்சம் கோடி மதிப்பில் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படும்
  • சாலையோர வியாபாரிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும்
  • விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை அதிகப்படுத்த ரூ16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை தொடரும்.
  • நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
  • வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு; 1,000 மண்டிகள் இணைப்பு

நிதிப்பற்றாக்குறை

  • நாட்டின் நிதிப்பற்றாக்குறை 9.50 சதவீதம் என கணிப்பு
  • அடுத்த நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக குறையும்
  • அடுத்த நிதியாண்டில் அரசின் செலவு ரூ.34.50 லட்சம் கோடியாக உயரும்
  • சந்தைகளில் இருந்து ரூ.12 லட்சம் கோடி கடன் பெற இலக்கு
  • தங்கத்திற்கு இறக்குமதி வரி 12.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைப்பு
  • மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி ஓதுக்கீடு
  • டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள ரூ 9,768 கோடி ஒதுக்கீடு

மின்சாரம், குடிநீர்

  • குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் 100 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்
  • மின்நுகர்வோர் தாம் விரும்பும் நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரத்தை பெற புதிய திட்டம் ஏற்படுத்தப்படும்
  • மின் விநியோகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் திட்டங்களுக்காக ரூ2.87 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
  • கூடுதலாக 1 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.
  • அடுத்த 3 ஆண்டுகளில் 100 மாவட்டங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

பொதுத்துறை

  • காப்பீட்டுத் துறையில் நேரடி அன்னிய முதலீடு 49%-ல் இருந்து 74% ஆக உயர்த்தப்பட்டது
  • எல்.ஐ.சி பங்குகளை விற்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா பங்குகளை விற்க நடவடிக்கை
  • 2 பொதுத்துறை, ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படும்
  • பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயம்
  • அரசு வங்கிகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் முதலீடாக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • வங்கி டெபாசிட் காப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் ஆக அதிகரிப்பு
  • தங்கத்துக்கான இறக்குமதி வரி 12.5%லிருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் சில விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும்
  • மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம்

கடல் வர்த்தகத் துறை

  • தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா அமைக்கப்படும்
  • சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்
  • வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்
  • அடுத்த 5 ஆண்டுகளில் வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து திட்டத்திற்காக ரூ1,624 கோடி ஒதுக்கீடு
  • ஆழ்கடல் ஆய்வுகளுக்கு, பல்லுயிர் பெருக்கத்தை காப்பாற்ற ஆழ்கடல் ஆய்வு அமைப்பு உருவாக்கப்படும்
English summary
Union Finance Minister Nirmala Sitharaman today presented the Union Budget for 2021-22. Additional emphasis has been given to the health sector in this budget
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X