30 விநாடிகள் குலுங்கிய கட்டிடங்கள்.. கொல்கத்தாவில் நிலநடுக்கத்தின் தாக்கம்! மக்கள் பீதி
டெல்லி: வங்கதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், கொல்கத்தாவில் எதிரொலித்தது. கொல்கத்தாவில் கட்டிடங்கள் 30 விநாடிகள் வரை குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.
வங்கதேசத்தின் நர்சிங்டியில் இன்று அதிகாலை 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கொல்கத்தாவில் எதிரொலித்தது. இதனால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நல்வாய்ப்பாக நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்படி, வங்கதேசத்தின் நர்சிங்டிக்கு தெற்கு-தென்மேற்கே 13 கி.மீ. தொலைவில் காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் ஆழம் 10 கி.மீ. ஆகப் பதிவு செய்யப்பட்டது. வங்கதேசத் தலைநகர் டாக்காவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. திரிபுராவின் தர்மநகர், மேகாலயாவின் துரா மற்றும் சிரபுஞ்சி, மிசோரம் மாநிலத்தின் அய்ஸ்வால் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம் பரவலாக இருந்தது.
முன்னதாக இன்று காலை பாகிஸ்தானிலும் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையம் 135 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்தது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications