கொல்கத்தா கூட்ட நெரிசலில் 17 பேர் பலி? பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு.. அமித்ஷா இரங்கல்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த துர்கா பூஜை விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

வடக்கு கொல்கத்தாவின் சாரதா பார்க் துர்கா பூஜையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். துர்கா பூஜை விழாவின் போது இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

Kolkata Stampede

பந்தலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த போது, திடீரென கனமழை பெய்ய தொடங்கி இருக்கிறது. இதனால் பந்தலுக்கு வெளியில் நின்றிருந்த மக்கள் அனைவரும் பந்தலுக்குள் நுழைய முயற்சித்துள்ளார். இதனால் பந்தல் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் பலரும் தடுமாறி கீழே விழுந்து மிதிபட்டு மயக்கம் அடைந்தனர்.

இதன்பின் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்ட பொதுமக்கள், உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு கூட காத்திருக்காமல் தங்களின் இருசக்கர வாகனங்களிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். இருப்பினும் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்பின் மீட்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தா கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கொல்கத்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் வேதனை அளிக்கிறது. குடும்பத்தினரை இழந்து தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் உள்ளூர் நிர்வாகம் வழங்கி வருகிறது என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண தொகை மத்திய அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+