தப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்

ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஐநாவில் விவாதிக்கப்பட்டது குறித்து லடாக்கை சேர்ந்த பாஜக எம்.பி ஜம்யாங் செரிங் நம்கியால் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஐநாவில் விவாதிக்கப்பட்டது குறித்து லடாக்கை சேர்ந்த பாஜக எம்.பி ஜம்யாங் செரிங் நம்கியால் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

கடந்த இரண்டு வாரம் முன்பு ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான விவாதம் லோக்சபாவில் நடந்தது.

அதில் லடாக்கை சேர்ந்த பாஜக எம்.பி ஜம்யாங் செரிங் நம்கியால் பேசியதுதான் பெரிய வரவேற்பை பெற்றது. ஒரே நாளில் மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

ஜம்யாங் செரிங் தனது பேச்சில், லடாக் குறித்து உங்களுக்கு என்ன தெரியும். நான் லடாக்கில் பிறந்து, அங்கே வளர்ந்து வாழ்ந்து வருகிறேன். எனக்குத்தான் லடாக்ககில் என்ன நடந்தது என்று தெரியும். மற்ற இந்திய மாநிலங்களில் போல எங்களின் லடாக் முன்னேற்றம் அடையவில்லை. இத்தனை வருடம் 370 சட்டம் மூலம் காஷ்மீர் முன்னேறாமல் இருந்தது.

பெரிய வைரல்

பெரிய வைரல்

காஷ்மீருக்கு எதிராக காங்கிரஸ் மிக மோசமாக செயல்பட்டு வந்தது. தற்போது பாஜக ஆட்சி மூலம் தொல்லைகளுக்கு எல்லாம் முடிவு வந்து இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு காரணமாக பாஜக கட்சிக்கு உள்ளேயும், கட்சிக்கு வெளியேயும் அவர் மிகவும் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.

ஐநா என்ன

ஐநா என்ன

இந்த நிலையில்தான் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. மொத்தம் 15 நாடுகள் சேர்ந்து காஷ்மீர் பிரச்சனையை விவாதம் செய்தனர். இது இந்தியாவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காஷ்மீர் பிரச்னையை ஐநா வரை சீனா கொண்டு சென்றது எதிர்காலத்தில் நமக்கு சிக்கலாக வாய்ப்புள்ளது.

மோசம்

மோசம்

ஆனால் இது தெரியாமல் எம்.பி ஜம்யாங் செரிங் நம்கியால் இதில் தவறான கருத்து ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அதில், ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஐநாவில் விவாதிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி எடுத்த அதிரடி நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீர் பிரச்சனை ஜநாவரை சென்றுள்ளது. அங்கு இது விவாதிக்கப்பட்டுள்ளது.

போச்சு

போச்சு

காங்கிரஸ் ஆட்சி இருந்த போது, காஷ்மீர் பிரச்சனையை அவர்கள் நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்கவில்லை. ஆனால் பாஜகவின் நடவடிகையால் இந்த பிரச்சனை ஐநாவிற்கு சென்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கருத்து பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரிய விமர்சனம்

பெரிய விமர்சனம்

இவரை இளம் ஹீரோ போல பாஜகவினர் கடந்த சில நாட்களாக சித்தரித்து வந்தனர். ஆனால் ஜம்யாங் செரிங் ஒரே பேட்டியில் காஷ்மீர் குறித்து தவறாக கருத்து தெரிவித்துள்ளார். ஜம்யாங் செரிங் என்ன காஷ்மீர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாதது போல பேசுகிறார் என்று பலர் விமர்சனம் வைத்துள்ளனர். அவரின் இந்த பேட்டி பாஜக தொண்டர்களை கோவத்திற்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+