டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உச்சகட்ட எதிர்பார்ப்பு.. மோடி 2.O-ன் கடைசி முழு பட்ஜெட்! எப்போது தொடங்கும் நிர்மலா உரை? முழு விவரம்

லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை எப்போது தொடங்குகிறது? அதை எப்படி பார்ப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பார்ப்போம்.

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி இருக்கும் நிலையில் நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 2024 நிதியாண்டிற்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் உரை எப்போது தொடங்குகிறது? பொதுமக்கள் அதை எப்படி பார்ப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பார்ப்போம்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கூடி இருக்கிறது. இதனை தொடர்ந்து நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

லோக் சபா தேர்தல் 2024 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட்தான் மோடி 2.O அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் என்பது குறிப்பித்தக்கது. அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.

குடியரசுத் தலைவர் உரையில் “காசி தமிழ் சங்கமம்”.. ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக திரௌபதி முர்மு புகழாரம் குடியரசுத் தலைவர் உரையில் “காசி தமிழ் சங்கமம்”.. ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக திரௌபதி முர்மு புகழாரம்

 எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வரி வகிதங்கள் உயர்வு, பொதுத்துறை தனியார்மயமாக்கல் போன்ற காரணங்களால் எரிபொருள், உணவு பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்த நிலையில் நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

பட்ஜெட் உரை எப்போது?

பட்ஜெட் உரை எப்போது?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மக்களவையில் தன்னுடைய பட்ஜெட் உரையை தொடங்குகிறார். கிட்டத்தட்ட 1 முதல் 2 மணி நேரம் வரை பட்ஜெட் உரை இருக்கும். கடந்த முறை நிர்மலா சீதாராமன் 92 நிமிடங்கள் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். இதுவரை அவர் பேசிய பட்ஜெட் உரைகளில் அதுவே சிறியதாகும். கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் பேசியதே மிகப்பெரிய பட்ஜெட் உரையாகும்.

தொலைக்காட்சி

தொலைக்காட்சி

இந்த பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வை மத்திய அரசின் டிடி (தூதர்ஷன் டிவி) அல்லது நாடாளுமன்றத்தின் சன்சாத் தொலைக்காட்சியில் பார்க்கலாம். அதேபோல் நாட்டின் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை நேர்காணல் செய்யப்பட உள்ளது.

இணையதளம்

இணையதளம்

சன்சாத் தொலைக்காட்சி மட்டுமின்றி யூடியூபில் சன்சாத் டிவி, தூதர்ஷன் டிவி, பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ (PIB) ஆகிய யூடியூப் சேனல்களிலும் பார்க்கலாம். அதேபோல் நமது ஒன் இந்தியா தமிழில் இணையதளத்தின் லைவ் பக்கம் மற்றும் ஒன் இந்தியா சமூக வலைதளங்களிலும் நிதியமைச்சரின் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

பட்ஜெட் செயலி

பட்ஜெட் செயலி

நிதியமைச்சர் பட்ஜெட் உரையை நிறைவு செய்த பிறகு அவர் வாசித்த பட்ஜெட் உரை Union Budget என்ற செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். அதை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதவிறக்கம் செய்துக்கொள்ள முடியும். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5 வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

 காகிதம் இல்லாத பட்ஜெட்

காகிதம் இல்லாத பட்ஜெட்

நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் கடந்த 2 ஆண்டுகளைபோல் காகிதமில்லாமல் வழங்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முறையாக டேப்லட் மூலம் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட பெட்டி ஒன்று மரபு ரீதியாக நிதியமைச்சரால் மக்களவைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அது பாஹி கட்டா என்ற உறை போட்ட புத்தகமாக மாற்றப்பட்டது.

English summary
When does Finance Minister Nirmala Sitharaman's budget speech in Lok Sabha start and how do we listen it. Let's see various information including how to watch it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X