டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய வீரர்கள் உடலில் கூர்மையான ஆயுதத்தாலான காயங்கள்.. மூட்டு முறிவுகள்.. "லே" மருத்துவர் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் மாதம் 15- 16-ஆம் தேதி இரவு சீனாவுடனான மோதலில் வீரமரணமடைந்த 20 வீரர்களின் உடலில் கூர்மையான ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்கள், பல்வேறு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Recommended Video

    India China Border Fight-ன் போது கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டோம் இந்திய வீரர்கள் வாக்குமூலம்

    லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த வாரம் சீனா அத்துமீறி இந்திய ராணுவத்தினருடன் கடும் மோதலில் ஈடுபட்டது. அப்போது 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில் சீன ராணுவத்தினரும் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில் போராடி வீரமரணமடைந்த நமது இந்திய வீரர்களை நினைத்து நாம் பெருமிதப்பட வேண்டும் என்றார்.

    லடாக் எல்லையில் 40 சீன வீரர்களை கொன்றது இந்தியா.. மறைக்கிறது சீனா.. மத்திய அமைச்சர் லடாக் எல்லையில் 40 சீன வீரர்களை கொன்றது இந்தியா.. மறைக்கிறது சீனா.. மத்திய அமைச்சர்

    துண்டிப்பு

    துண்டிப்பு

    இந்த நிலையில் செங்குத்தான மற்றும் துண்டிக்கப்பட்ட நில பரப்பில் இரு தரப்பினரும் கைகலப்பில் பல மணி நேரம் ஈடுபட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் ஏராளமானோர் இந்த மோதலின் போது அங்கிருந்த கால்வன் ஆற்றில் மூழ்கியும் கடுங்குளிர் தாளாமலும் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

    சீன ராணுவத்தினர்

    சீன ராணுவத்தினர்

    இதுகுறித்து லே பகுதியில் உள்ள சோனம் நுர்பூ நினைவு மருத்துவமனையின் மருத்துவர் கூறுகையில் இந்திய வீரர்களின் உடல்களை பார்க்கும் போது அது பயங்கரமான மோதலாக உள்ளது. அது போல் சீன ராணுவத்தினர் பலரை இந்தியா கொன்றது தெரிகிறது. இந்திய வீரர்களின் உடலில் உள்ள காயங்களை பார்த்தேன்.

    கடுங்கோபம்

    கடுங்கோபம்

    அவை கூர்மையான ஆயுதங்களால் குத்தியது போன்று உள்ளது. மேலும் சிலருக்கு மூட்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன என்றார். கமாண்டிங் அதிகாரி சந்தோஷ் பாபு தாக்கப்பட்டவுடன் இந்திய ராணுவத்தினர் சீனா ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. கமாண்டிங் அதிகாரியும் மற்றும் சிலரும் தாக்கப்பட்டவுடன் இந்திய ராணுவத்தினர் கடுங்கோபத்தில் இருந்தனர்.

    காயம்

    காயம்

    கடுங்கோபத்துடன் அவர்கள் சீன ராணுவத்தினரை தாக்கியதும் தெரியவந்தது. கத்தி உள்ளிட்டவற்றை சீன ராணுவத்தினரிடம் இருந்து பறித்து அவர்களை திருப்பி தாக்கியதும் தெரியவந்துள்ளது. இவை காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் உள்ள அதிகாரிகளிடம் கூறியதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

    English summary
    Leh Doctor who had seen dead bodies of Indian soldiers, says that sharp weapon wounds and multiple fractures in Galwan Dead.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X