லோக்சபா தேர்தல்: ம.பி, அசாமில் தட்டி தூக்கும் பாஜக.. 25-27 சீட்டுகள் கிடைக்குமாம்.. டைம்ஸ் நவ் சர்வே
டெல்லி: லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை அமைத்துள்ளன. பாஜகவை ஒரே அணியாக நின்று வீழ்த்தும் திட்டத்துடன் இந்தியா கூட்டணி திட்டம் வகுத்துள்ளது.

இதனால், வரும் லோக்சபா தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தில் வரும் லோக்சபா தேர்தலிலும் என்.டி.ஏ கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்று Times Now- ETG Research கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மத்திய பிரதேசம்: மொத்த இடங்கள்: 29
பாஜக கூட்டணி : 25-27
இந்தியா கூட்டணி : 2-4
இதர கட்சிகள்: 0
அதேபோல், வடக்கிழக்கு மாநிலமான அசாமிலும் பாஜக கூட்டணிக்கே இந்தியா கூட்டணியை விட அதிக இடங்கள் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அஸ்ஸாம்: மொத்த இடங்கள்: 14
பாஜக கூட்டணி : 7-9
இந்தியா கூட்டணி : 4-6
இதர கட்சிகள்: 0
இதே போல காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஷ்கரிலும் தேசிய ஜனநாயாக கூட்டணிக்கே அதிக இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன.
சத்தீஸ்கர்: மொத்த இடங்கள் - 11
பாஜக கூட்டணி - 07-09
இந்தியா கூட்டணி (I.N.D.I.A) - 02-04
இதர கட்சிகள்: 0
-
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications