ஓ மை காட்.. கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம்.. ரயிலில் நடந்த அக்கிரமம்.. காதலுக்கு கண் இல்லைதான்!
ஓடும் ரயிலில் பெண்ணுக்கு முத்தமிட்ட இளைஞர்
டெல்லி: பக்கத்தில் இத்தனை பேர் உட்கார்ந்திருக்கார்களே.. என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நினைக்கவில்லை.. காதலியை இறுக்கமாக கட்டிப்பிடித்து கொண்டு உதட்டில் முத்தம் தருகிறார் காதலன்.. டெல்லி மெட்ரோ ரயிலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறது.
டெல்லி மெட்ரோ ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. பொதுவாக மெட்ரோ ரயிலில் அதிகமானோர் பயணிப்பது வழக்கம்... இதில் நிறைய காதல் ஜோடிகளும் பயணிப்பார்கள்.. அப்படித்தான் போன வாரம் ரயில் சென்று கொண்டிருந்தது.

அதில் ஒரு இளம்காதல் ஜோடி அமர்ந்திருந்தது.. இருவருமே மார்டன் பேர்வழிகள்.. பார்ப்பதற்கு பெரிய வீட்டு பிள்ளைகள் போல இருக்கிறார்கள்.. திடீரென அந்த காதலன், பெண்ணை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
இதை பார்த்து மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.. இந்த ஜோடியை சுற்றிலும் பெண்கள் உட்பட பலர் இதை பார்த்து அதிர்ந்தனர்.. ஏதோ தெரியாமல் செய்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.. நீண்ட நேரமாகவே இந்த முத்த அட்டகாசம் நடந்து வந்தது.
யார் என்ன நினைப்பார்கள் என்பதைபற்றி கூட கவலையில்லாமல் இந்த ஜோடி பொதுமக்கள் முன்னிலையிலேயே அத்துமீறி உள்ளது. இப்படி முத்தம் தருவதை இவர்களுக்கு முன் எதிரே உட்கார்ந்திருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து, இணையத்திலும் போட்டுள்ளார்.
நாடு எங்கே போயிட்டு இருக்குன்னு தெரியலையே.. வெளிநாட்டை போல இங்கேயும் ஆரம்பிச்சிட்டாங்களே... என்ற அதிர்ச்சி புலம்பல்கள் கொட்ட ஆரம்பித்துள்ளன.. வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு பலரும் காரசார விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications