டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய ஐடி விதிகளை பின்பற்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்.. டிவிட்டர் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம், இது தொடர்பாக சில இந்திய அதிகாரிகளை நியமித்து உள்ளோம், என்று டிவிட்டர் நிறுவனம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய தகவல்கள் தொழில்நுட்ப துறை மூலம் சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் புதிய ஐடி விதிகள் கொண்டு வரப்பட்டன. அதன்படி இந்த சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடி தளங்கள் தங்களிடம் வரும் புகார்களை விசாரிப்பதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.

14ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. நடக்கப் போகும் 2 விஷயங்கள்.. ஜெயக்குமார் பேச்சை கவனிச்சீங்களா?14ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. நடக்கப் போகும் 2 விஷயங்கள்.. ஜெயக்குமார் பேச்சை கவனிச்சீங்களா?

அரசு வைக்கும் புகார்களை இந்த அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். இன்னும் சில விதிகள் இதேபோல் விதிக்கப்பட்டு இருந்தன. இந்த விதிகளை பின்பற்ற கடந்த மாதம் வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இதை டிவிட்டர் நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வமாக ஏற்கவில்லை.

டிவிட்டர்

டிவிட்டர்

இந்த நிலையில் மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம், இது தொடர்பாக சில இந்திய அதிகாரிகளை நியமித்து உள்ளோம் என்று டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், இந்த விதிகளின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம். எங்களின் நிலைப்பாடு தொடர்பாக மத்திய அரசுக்கு விரைவில் தகவல் தெரிவிப்போம்.

ஒரு வாரம்

ஒரு வாரம்

விரைவில் அல்லது ஒரு வாரத்திற்குள் நாங்கள் இது தொடர்பாக எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம். இந்தியாவுடன் நாங்கள் ஆழ்ந்த பிணைப்பை கொண்டு இருக்கிறோம். இது தொடர்பாக ஆக்கபூர்வமான விவாதங்களை மேற்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். இந்த விதிகளை பின்பற்று முயற்சி செய்கிறோம்.

Recommended Video

    மத்திய அரசின் புது ஐடி விதி.. குழப்பத்தில் மக்கள்.. இனி என்ன நடக்கும்?
    பகிர்ந்து உள்ளோம்

    பகிர்ந்து உள்ளோம்

    எங்களின் நிலைப்பாடு குறித்து இந்திய அரசுக்கு நாங்கள் தொடர்ந்து தகவல்களை அறிவித்து இருக்கிறோம். இது தொடர்பாக ஆக்கபூர்வமான பேச்சுக்களை அரசுடன் செய்ய விரும்புகிறோம். ஏற்கனவே நோடல் தொடர்பு அதிகாரி (Nodal Contact Person), குடியுரிமை குறை தீர்க்கும் அலுவலகம் (Resident Grievance Officer) ஆகியோரை நியமனம் செய்து இருக்கிறோம்.

    யார்

    யார்

    தலைமை இணக்க அலுவலர் (Chief Compliance Officer) ஒருவரை மட்டும் நியமிக்க வேண்டும். அவருக்கான தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. கொரோனா காலம் என்பதால் இவரை நியமிப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் விதிகளை முழுமையாக பின்பற்ற கொஞ்சம் தாமதம் ஆகிறது. ஒரு வாரத்திற்குள் நாங்கள் இது தொடர்பாக எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம், என்று டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    English summary
    Making all the effort to comply with the IT Rules of India says Twitter after appointing a Nodal Contact Person.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X