டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்டா பிளஸ் கொரோனா இந்தியாவில் 3-வது அலையை உருவாக்குமா?.. இதன் அறிகுறிகள் என்ன?.. முழு விவரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் ஒன்றரை ஆண்டுகளாக இருந்து வருகிறது. கொரோனா வைரசானது உருமாறிய வகையில் பல்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது. இதனால் இதை முழுமையாக ஒழிக்க முடிவதில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Recommended Video

    Delta + ஆக உருமாற்றம் அடைந்தது Delta வகை Coronavirus.. எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் ?

    அந்த வகையில் டெல்டா வகை என்ற கொரோனா வைரஸ் இந்தியாவில் கொரோனா 2-வது அலைக்கு மூல காரணமாக விளங்கியது. தற்போது டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வகை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103 உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103

    இந்த டெல்டா பிளஸ் வைரஸ் மாறுபாடு இந்தியாவைத் தவிர இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, போலந்து, ஜப்பான், நேபாளம், சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முதலாக மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பாதிப்புடன் 21 கேஸ்கள் பதிவாகியுள்ளன.

    டெல்டா பிளஸ் வைரஸ்

    டெல்டா பிளஸ் வைரஸ்

    நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் டெல்டா பிளஸ் பாதிப்புடன் 3 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகா, மத்தியப் பிரதேசத்திலும் இந்த வைரஸ் கண்டறிப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் பரவி வருவதால் 3வது அலையை இந்த வகை வைரஸ் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

    எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

    எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

    டெல்டா அல்லது பி .1.617.2 வேரியண்ட்டில் உள்ள பிறழ்வு காரணமாக புதிய டெல்டா பிளஸ் மாறுபாடு உருவாகியுள்ளது. இந்தியாவில்தான் முதன் முதலாக டெல்டா பிளஸ் கண்டறியப்பட்டது. இந்த மரபணுவின் ஆரம்ப வரிசை ஐரோப்பாவில் இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்டா பிளஸ் மாறுபாட்டின் இருப்பைத் தீர்மானிக்க தேசிய வேதியியல் ஆய்வகம் (சி.எஸ்.ஐ.ஆர்-என்.சி.எல்) இப்போது மகாராஷ்டிராவிலிருந்து வந்த மாதிரிகளை ஆய்வு செய்து வருகிறது.

    அறிகுறி என்ன?

    அறிகுறி என்ன?

    வறண்ட இருமல், காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் வலி, தோல் வெடிப்பு, கால்விரல்கள் மற்றும் விரல்கள் நிறமாற்றம், தொண்டை வலி, வெண்படல அழற்சி, சுவை மற்றும் வாசனை இழப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி, மார்பு வலி, மூச்சுத் திணறல், பேச்சு இழப்பு, வயிற்று வலி, குமட்டல், பசியின்மை, வாந்தி, மூட்டு வலி, காது கேளாமை ஆகியவையே டெல்டா பிளஸ் வைரஸ் அறிகுறிகள் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

    நோய் எதிர்ப்பு சக்தி எதிர்ப்பு

    நோய் எதிர்ப்பு சக்தி எதிர்ப்பு

    டெல்டா பிளஸ் மாறுபாடு கொரோனாவுக்கான மோனோக்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் சிகிச்சைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் தடுப்பூசிகள் மற்றும் முந்தைய கொரோனா தொற்றுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை ஆகிய இரண்டினாலும் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைத் டெல்டா பிளஸ் வைரஸால் முறியடிக்க முடியும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    தடுப்பூசி வேலை செய்யுமா?

    தடுப்பூசி வேலை செய்யுமா?

    டெல்டா பிளஸ் வைரஸ் மாறுபாட்டில் தடுப்பூசிகளின் செயல்திறனை விஞ்ஞானிகள் இன்னும் சோதிக்கவில்லை. ஆனாலும் எம்ஆர்என்ஏ தடுப்பூசி 88% யனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றனர். ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகிய தடுப்பூசிகளும் சுமார் 60 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மாடர்னா மற்றும் ஃபைசர் / பயோஎன்டெக் உருவாக்கிய தடுப்பூசிகள் எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

    கோவிஷீல்ட், கோவாக்சின்

    கோவிஷீல்ட், கோவாக்சின்

    ஆனால் ஆராய்ச்சியின் படி, ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் டெல்டா மாறுபாட்டின் பாதிப்புக்கு எதிரான முதல் டோஸுக்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு 33 சதவிகிதம் மட்டுமே பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது, இது ஆல்பா மாறுபாட்டிற்கு 50 சதவிகிதம் பயனுள்ளதாக இருந்தது. ஆயினும் 63 பேர் கொண்ட ஒரு சிறிய குழுவில் எய்ம்ஸ் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில், கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் எதுவும் டெல்டா பிளஸ் வைரஸ் மாறுபாட்டிற்கு எதிராக செயல்படவில்லை என்று பரிந்துரைத்தன.

    இந்தியாவுக்கு ஆபத்தா?

    இந்தியாவுக்கு ஆபத்தா?

    டெல்டா பிளஸ் மாறுபாடு எதிர்வரும் மாதங்களில் இந்தியாவில் மூன்றாவது அலையை கட்டவிழ்த்து விடக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஏனெனில் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கக்கூடும்.இந்த புதிய மாறுபாட்டின் பரவலானது இந்தியாவில் இன்னும் குறைவாக உள்ளது. ஆனால் பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக உள்ளது. எனினும் டெல்டா முழுவதும் பரவாமல் இருப்பது மக்களின் கையில்தான் இருக்கிறது என்று சுகாதாரநிபுணர்கள் கூறுகின்றனர்.

    English summary
    Medical experts have warned that Delta Plus Corona will create the 3rd wave in India
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X