விவசாயிகளுக்கு எதிராக தேசதுரோகம் அல்லது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.. மத்திய அரசு
டெல்லி; மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு எதிராக டெல்லி காவல்துறை தேசத்துரோகம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (உபா) ஆகியவற்றின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் ராஜ்யசபாவில் விளக்கம் அளித்துள்ளது.
டெல்லியில் உள்ள செங்கோட்டையில் ஜனவரி 26ம் தேதி (குடியரசு தினம்) அன்று மத்திய அரசின் மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டிராக்டர் பேரணி போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். பல்லாயிரக்கணக்கான டிராக்டர்கள் உள்ளே வந்ததால் டெல்லி போலீசார் திணறினர். இந்த சம்பவத்தின் போது டெல்லி போலீசார் மற்றும் விவசாயிகளிடையே மோதல் ஏற்பட்டது.இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

மே மாதத்தில், இந்த வழக்கில் முக்கிய சதிகாரர்களாக பெயரிடப்பட்ட நடிகர் தீப் சித்து மற்றும் கேங்ஸ்டர்-ஆக்டிவிஸ்ட் லக்கா சித்தனா உட்பட 16 பேர் மீது டெல்லி காவல்துறை 3,224 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தேசத்துரோகம், கலவரம், கொலை முயற்சி, பகைமை மற்றும் வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தேசதுரோக சட்டம் அல்லது உபா தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ராஜ்யசபாவில் சிபிஐ கட்சி எம்பி பினோய் விஸ்வாம் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், 2020 முதல் ஜூலை வரை விவசாயிகள் போராட்டம் தொடர்பாக 183 பேர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
"டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, தேசத்துரோக விதிகள் அல்லது யுஏபிஏ போன்ற வேறு எந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட எந்த வழக்குகளும் இல்லை" இவ்வாறு உள்துறை அமைச்கம் சார்பில் இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications