பறக்கும் மனிதர் மில்கா சிங்கின்... மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் காலமானார்
டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக 'இந்தியாவின் பறக்கும் மனிதர்' என்று அழைக்கப்படும் பிரபல தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் உயிரிழந்தார்.
கொரோனா 2ஆம் அலையில் இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்து வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் பாதிப்பும், உயிரிழப்பும் மிக அதிகமாக உள்ளது.

இந்நிலையில், 'இந்தியாவின் பறக்கும் மனிதர்' என்று அழைக்கப்படும் தடகள வீரர் மில்கா சிங்கிற்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர்(85) FORTIS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிராக நிர்மல் கவுர் கடைசி வரை துணிச்சலாகப் போராடியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 91 வயதாகும் மில்கா சிங் தற்போது சண்டிகரிலுள்ள PGIMER மருத்துவமனையில் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துவிட்டாலும், உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தியாவின் பெண்கள் வாலிபால் அணியின் கேப்டானாக இருந்தவர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல். மேலும், பஞ்சாப் அரசின் பெண்களுக்கான விளையாட்டு இயக்குநராகவும் இவர் இருந்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications