சட்டென நின்று போன கூகுள் மேப்.. நடுவழியில் சிக்கித் தவித்த பயனர்கள்.. காரணம் என்ன தெரியுமா?
டெல்லி : உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கான வழிகாட்டல் செயலியான Google Maps இன்று மதியம் செயலிழந்து விட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து கூகுள் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என பயனர்கள் புகார் கூறி வருகின்றனர்.
உலகளாவில் இணைய சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் மேப் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் வாகன பயணம் மேற்கொள்ளும் மக்கள் தங்கள் செல்லவேண்டிய இடத்திற்கான பகுதியை குறிப்பிட்டால் போதும் கூகுள் மேப் பாதையை துல்லியமாக கணிக்கும்.

கூகுள் மேப்ஸ்
மேலும் எங்கெங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளது எங்கெங்கு வேகமாக செல்லலாம் உள்ளிட்ட வசதிகளையும் கூகுள் மேப் வழங்குகிறது. இதனால் இதுவரை செல்லாத பகுதிகளுக்குக் கூட யாரும் உதவி கேட்காமலேயே எங்கு வேண்டுமானாலும் சென்று வந்துவிடலாம். மேலும் அந்த வழியில் உள்ள பெட்ரோல் பங்குகள் உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளையும் கூகுள் மேப் தங்கள் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது.

சில குறைபாடுகள்
அதே நேரத்தில் சில குறைபாடுகளும் கூகுள் மேப்பில் உள்ளது. பல நேரங்களில் கூகுள் மேப்ஸ் செயலி இணையத்தில் கனெக்ட் ஆகாமலும், செயல்படாமலும் நின்று போவதும் வாடிக்கையாகி வருகிறது. மேலும் அவ்வபோது அப்டேட் செய்யப்படாமல் இருப்பதாகவும் கூகுள் மேப் பயனர்கள் கூறிவருகின்றனர். இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கான வழிகாட்டல் செயலியான Google Maps இன்று மதியம் செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

டவுன் டிடெக்டரில் புகார்
டவுன் டிடெக்டரின் கூற்றுப்படி, மதியம் 3 மணி முதல் கூகுள் மேப்ஸ் நின்று போனதால் உலகளாவிய பயனர்கள் பாதிக்கப்பட்டனர். ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனில் கூகுள் மேப்ஸை பயன்படுத்த முயன்றபோது, மேப்ஸ் இணையத்தில் கனெக்ட் ஆகவில்லை என எரர் செய்தி வந்தது. இதனால் இண்டர்நெட்டில் பிரச்சினை என நினைத்தபோதும் மற்ற ஆப்கள் இயங்கியது. இணையதளத்தில் ரூட் பிளானர் கருவி வேலை செய்வதாகத் தோன்றினாலும், மேப்ஸ் வேலை செய்யவில்லை

காரனம் என்ன?
கூகுள் மேப்ஸ் செயலிழப்பிற்கான காரணம் தெளிவாக கூறப்படவில்லை என்றாலும், 11,000 க்கும் மேற்பட்ட புகார்கள் டவுன் டிடெக்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து புகாரளித்தவர்களில், 58 சதவீதம் பேர் இணையதளத்தில் சிரமப்படுவதாகவும், 39 சதவீதம் பேர் செயலி பிரச்சினை இருப்பதாகவும், மூன்று சதவீதம் பேர் டேட்டாவில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். செயலிழப்பு குறித்து புகார்களுக்கு Google இன்னும் பதிலளிக்காத நிலையில், யூசர்ஸ் ட்விட்டரில் புகார் கூறி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications