டெல்டாவில் கச்சா எண்ணெய்க்கு ஏலம்.. மத்திய அரசின் அடுத்த அறிவிப்பு.. கொந்தளிப்பில் நெடுவாசல்!
டெல்லி: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நெடுவாசலுக்கு அருகே "வடத்தெரு" பகுதியில் கச்சா எண்ணெய், ஷேல் கேஸ் எடுக்க ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட பிறகும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடதெரு பெகுதியில் கச்சா எண்ணெய், ஷேல் கேஸ் எடுக்க ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. டெல்டா மக்களின் நீண்டகால கோரிக்கையான இந்த அறிவிப்பிற்கு பெரும் வரவேற்பு அப்போது வந்தது.
காவிரி டெல்டா பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் - கேஸ் கிணறுகளால், விவசாயம் பாதிக்கப்பட்டிருந்ததாலும் மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் பெரும் ஆபத்து நெருங்கியதாலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல என்ற அறிவிப்பை மக்கள் வரவேற்றனர்,.

எரிவாயு எடுக்க தடை
அரசு அறிவித்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த எஃகு ஆலை, இலகு இரும்பு உருக்காலை, தாமிர உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

30 உறுப்பினர்கள்
தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டு, முதலமைச்சர் தலைமையில் செயல்படும். இதில் முப்பது உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இப்பகுதியில் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை அவர்கள் அளிப்பார்கள் என்றும் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் கூறுகிறது.

பாதுகாக்கப்பட்ட பகுதிகள்
இந்த சட்டப்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களும் கடலூர் மாவட்டத்திலிருந்து காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களும் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்துள்ளன.

கச்சா எண்ணெய்
இப்படியான சூழலில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட பிறகும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடதெரு குதியில் கச்சா எண்ணெய், ஷேல் கேஸ் எடுக்க ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நெடு வாசலுக்கு அருகே "வடத்தெரு" பகுதியில் கச்சா எண்ணெய், ஷேல் கேஸ் எடுக்க ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பிற்கு நெடுவாசல் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நெடுவாசலில் ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிராக பெரிய போராட்டங்கள் நடத்தியிருந்தனர். இந்த சூழலில் அதே பகுதியில் ஏலத்திற்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications