நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தமிழர்கள் சென்ற 2 பஸ்கள்! ராஜ்மோகன் உருக்கமான தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழர்கள் சென்ற 2 பேருந்துகள் நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன என அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி அளித்துள்ளார். நடுவில் சென்ற பேருந்தில் இருந்த 21 தமிழர்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: நேபாளத்திற்கு ஆன்மீக யாத்திரையாக 3 பேருந்துகளில் தமிழர்கள் சென்று கொண்டிருந்தனர்.

Nepal flood

அப்போது அவர்கள் சென்ற வாகனங்களில் முதல், 3ஆவதாக சென்ற இரு வாகனங்கள் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நடுவில் சென்ற வாகனத்தில் இருந்த 21 தமிழர்கள்தான் தற்போது உயிர் தப்பினர்.

அவர்கள் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். தங்களுடன் வந்த இரு பேருந்தும் அடித்து செல்லப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் தங்களுடன் யாத்திரை மேற்கொண்டவர்கள் இன்று மாயமாகியுள்ளதை நினைத்து அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

மீட்கப்பட்ட தமிழர்கள், நேபாள வெள்ளத்தில் தங்கள் பாஸ்போர்டுகளை தவறவிட்டுவிட்டனர். மேலும் மாயமான தமிழர்களை மீட்கும் முயற்சியிலும் அவர்களை தொடர்பு கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். வெளியுறவுத் துறை, மீட்பு படையினருடன் தொடர்பில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட 21 பேரையும் தமிழக அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அவர்களுக்கு ஆறுதலை தெரிவித்தனர். மேலும் அவர்கள் இன்று 8 மணி அளவில் சென்னை வந்தடைவர்.

திபெத் எல்லையையொட்டி நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கோஷி ஆற்றில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளம் அந்த நாட்டையே புரட்டி போட்டது. இதுவரை 530 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட சோக சம்பவமும் நடந்துள்ளது.

இந்தியாவில் இருந்து கைலாய யாத்திரைக்கு சென்ற நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கினர். தமிழகத்தில் இருந்து 103 பேர் சென்ற நிலையில் அவர்களில் 21 பேர் மட்டுமே பத்திரமாக இருந்த நிலையில் அவர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

மீதமுள்ளவர்களின் நிலை குறித்து தெரியவில்லை. டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட 21 தமிழர்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: முதல் கட்டமாக காத்மாண்டுவில் இருந்து 21 இந்தியர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

திரிசூலியில் நடந்து வரும் திரிசூலி ஒன் நீர் மின் திட்டத்தில் பணிபுரியும் 63 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட தகவல் கிடைத்தது. சீன பகுதியில் சிக்கியிருந்த 96 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

தற்போதைய நிலவரப்படி மாயமான இந்தியர்களின் எண்ணிக்கை 320 ஆக உள்ளது. நேபாளத்தில் உள்ள 100 இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்கள் கைலாஷ் யாத்திரைக்கு சென்றவர்கள். சீன பகுதியில் 400 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களின் குடும்பத்தினரும் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

நேபாளத்தின் கோரிக்கையை ஏற்று, சுரங்கபாதை மீட்புக் குழுவை அனுப்ப தயாராகி வருகிறோம். அது போல் தொழில்நுட்பக் குழுக்களை அனுப்பவும் தேசிய பேரிடர் மீட்பு படையையும் அனுப்ப நேபாள அரசிடம் கேட்டுள்ளோம். அவர்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+