டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நதிநீர் முதல் சுற்றுச்சூழல் திருத்த சட்டம் 2020 வரை மோடியிடம் ஸ்டாலின் வைத்த 25 கோரிக்கைகள்

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் நீட் தேர்வை ரத்துச் செய்ய வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து கொண்டு வர வேண்டும்.கோவையில் எய்ம்ஸ் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் அளித்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்.

தமிழ்நாடு முதல்வரான பின்னர் முதன்முறையாக டெல்லி சென்ற மு.க ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து 25 நிமிடங்கள் பேசினார். தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட பல கோரிக்கைகள் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.

MK Stalins 25 demands on Modi from River Water First Environmental Amendment Act 2020

பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க ஸ்டாலின் அளித்துள்ள அந்த மனுவில், மேகதாது அனுமதியினை ரத்து செய்ய வேண்டும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்.கோதாவரி-காவேரி நதிநீர் இணைப்பு, காவேரி- குண்டாறு இணைப்புத்திட்டம்.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவேரி நதிநீரை தமிழ்நாட்டிற்காக ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.கச்சதீவை மீட்டெடுக்க வேண்டும்.தேசிய அளவில் மீனவர்களுக்கான நலவாரியம் அமைக்க வேண்டும்.

மாநிலங்களுக்கான உரிய நிதி பங்கீட்டை அளிக்க வேண்டும். (15ஆவது நிதிக்குழு அறிக்கையின் படி)14ஆவது நிதிக்குழு பரிந்துரையின் படி உரிய நிதியை ஒதுக்க வேண்டும். நிலுவையில் 1996-1997 முதல் உள்ள 2014-15 வரையிலான ஒன்றிய அரசின் வரியில் மாநிலத்தின் பங்கை அளிக்க வேண்டும்.நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

நீட் தேர்வை ரத்துச் செய்ய வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து கொண்டு வர வேண்டும்.கோவையில் எய்ம்ஸ் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கறுப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்தை ஒதுக்க வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கை திரும்ப பெற வேண்டும்.கட்டாயக் கல்வி பெறும் சட்டத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும்

விவசாய சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.பஜால் பீமா யோஜனா நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு தேவையான அரிசியை ஒதுக்க வேண்டும்.

உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் - மோடி உடனான சந்திப்பு பற்றி ஸ்டாலின் விளக்கம்உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் - மோடி உடனான சந்திப்பு பற்றி ஸ்டாலின் விளக்கம்

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் திறக்க அனுமதிக்க வேண்டும்.மெகா ஜவுளி பூங்கா கொண்டு வர வேண்டும்.சேலம் இரும்பு ஆலை இடத்தை ராணுவப் பூங்கா அமைக்க ஒதுக்க வேண்டும்.

சிறு குறு நிறுவனங்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். நிலக்கரி விநியோகத்தில் உள்ள சிக்கல்களை நீக்க வேண்டும்.மின்சார திருத்த சட்டம் 2020ஐ திரும்பப் பெற வேண்டும்.

தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.

சென்னை மெட்ரோசென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்க நிதியினை ஒதுக்க வேண்டும்.ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும். இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கான உரிமை நிலைநாட்ட வேண்டும்.

மாநிலங்கள் இட ஒதுக்கீட்டை பின்பற்றும் உரிமையை அளிக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறைமதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சென்னை விமான நிலையம் முதல் செங்கல்பட்டு உயர்மட்டப் பாதை அமைக்க வேண்டும்.

MK Stalins 25 demands on Modi from River Water First Environmental Amendment Act 2020

திருவொற்றியூர் பறக்கும் சாலை அமைக்க வேண்டும். சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டம் 6/8 சென்னை - கன்னியாகுமரி முதல் அமைக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்தை விரிவுப்படுத்த வேண்டும்.சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வேண்டும்.

விமான நிலைய விரிவாக்கம் சென்னை விமான நிலையத்தை உலக தரத்திற்கு உயர்த்த வேண்டும். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும்.சேலம், தூத்துக்குடி விமான நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும்.

33 சதவிகித இட ஒதுக்கீட்டை மாநிலத்திலும் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும்.தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். நகர வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு புதிய ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு அமர்வை சென்னையில் கொண்டு வர வேண்டும். சுற்றுச்சூழல், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்கள் கைவிட வேண்டும்.சுற்றுச்சூழல் திருத்த சட்டம் 2020ஐ திரும்ப பெற வேண்டும் எனக் கோரியுள்ளார்

English summary
NEET Exam should be canceled in Tamil Nadu. Tamil Nadu Chief Minister MK Stalin has submitted a petition to Prime Minister Narendra Modi containing 25 demands, including that the AIIMS in Madurai should be brought to the hospital immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X