டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏர்போர்ட்டிற்கு இணையாக ரயில் நிலையங்களில் நவீன பாதுகாப்பு வசதிகள்.. ஆர்.பி.எப் இயக்குநர் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டிலுள்ள முக்கிய ரயில் நிலையங்களில் உயர் பாதுகாப்புடன் கூடிய நுழைவு பாதைகள் அமைக்கப்படும். இவை விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை ஒத்திருக்கும் வகையில் அமைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள ரயில் நிலையங்கள் எப்போதுமே தீவிரவாதிகளின் முக்கிய இலக்காககவும், எளிதாக தாக்குதல் நடத்த வசதியாகவும் இருந்து வருகின்றன. முக்கிய ரயில் நிலையங்கள் அமைந்துள்ள மும்பை, டெல்லி, வாரணாசி, லக்னோ மற்றும் குவஹாத்தி போன்றவை தீவிரவாதிகளுக்கு முன்னர் எளிய இலக்குகளாக இருந்தன.

Modern security facilities at railway stations parallel to airports .. RPF Director Information

மேற்கண்ட நகரங்களில் இயங்கிய பயணிகள் ரயில்கள் உட்பட பலவற்றில் தொடர் குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்து பலர் பலியாகியுள்ளர். இந்நிலையில் ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி, ஆர்பிஎப் இயக்குநர் அருண்குமார் யெ்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர் முக்கிய ரயில் நிலையங்களின் நுழைவு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள ஸ்கேனிங் கேஜெட் சாதனங்கள் இன்னும் நவீனமயமாக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். மேலும் ரயில் நிலையங்களுக்குள் எளிதில் நுழையும் வகையில் உள்ள, பல்வேறு வழிகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அங்கெல்லாம் உயர் பாதுகாப்புச் சுவர்களை எழுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தோல்வி.. அடுத்தடுத்து தற்கொலை செய்த 2 மாணவிகள்.. அதிர்ச்சியில் தமிழக மக்கள் நீட் தேர்வில் தோல்வி.. அடுத்தடுத்து தற்கொலை செய்த 2 மாணவிகள்.. அதிர்ச்சியில் தமிழக மக்கள்

மேலும் இந்திய ரயில்வேயின் முக்கிய ரயில் நிலையங்களின், முக்கிய பகுதிகளில் அதி திறமை வாய்ந்த சிறப்பானபயிற்சி பெற்ற ஆர்பிஎப் கமாண்டோ வீரர்களை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். ஸ்கேன் உள்ளிட்ட அதி நவீன சோதனைகளுடன் கூடிய பாதுகாப்பு நுழைவாயில்கள் வழியாக மட்டுமே, பயணிகள் ரயில் நிலையங்களுக்குள் போகவோ, வெளியே வரவோ இயலும் என்ற சூழல் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவித்தார்.

மேலும் பல முக்கிய ரயில் நிலையங்கள் உள்ே வருவதற்கும், வெளியே போவதற்கும் ஏராளமான வழிகளை கொண்டுள்ளன. இதனால் ரயில் நிலையத்திற்கு தொடர்பு இல்லாத பலர் உள்நுழைந்து தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்துகின்றனர். தேவையற்ற நபர்கள் மற்றும் தீவிரவாதிகள் இம்மாதிரியான ரயில் நிலையங்களில் எளிதாக நுழைகின்றனர்.

எனவே தற்போது மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகள் மூலம், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்த அதி நவீன ரயில்நிலையமாக திகழும் என கூறப்பட்டுள்ளது.

English summary
High-security entry paths will be set up at major railway stations in modern railways at par with the airport.RPF Director Information...
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X