தலை குனிந்த மோடி.. 2 கையை பிடித்து மரியாதை! யார் அந்த 90 வயது பாட்டி உமா சுச்தேவா?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் 90 வயது மூதாட்டியின் கையை பிடித்து தனது தலையை குணிந்து வணங்கிய புகைப்படங்கள் இடம்பெற்ற நிலையில் அவர் யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இன்று திருமதி உமா சுச்தேவா அவர்களுடன் மறக்க முடியாத சந்திப்பு நடைபெற்றது. அவருக்கு 90 வயதாகிறது. வீரம் மற்றும் நம்பிக்கையால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
இவரது கணவர் ஓய்வுபெற்ற ராணுவ கர்னல் எச்.கே.சுச்தேவா அவர்கள் அனைவராலும் மதிக்கப்படும் மூத்தவர். இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைவர் வேத் மாலிக் அவர்களின் அத்தை உமா அவர்கள்.

மோடி ட்வீட்
மறைந்த தன்னுடைய கணவர் எச்.கே.சுச்தேவா எழுதிய 3 புத்தகங்களை உமா என்னிடம் வழங்கினார். அவற்றில் 2 புத்தகங்கள் பகவத் கீதையுடன் தொடர்புடையவை. மேலும் ஒரு புத்தகம் இரத்தம் மற்றும் கண்ணீர் என்ற தலைப்புடன் உள்ளது. அதில் எச்.கே.சுச்தேவா தன்னுடைய ராணுவ பணி நாட்களின் அனுபவங்களை எழுதியுள்ளார்.

வணங்கிய பிரதமர்
தேச பிரிவினையின்போது தனக்கு ஏற்பட்ட மனநிலை பற்றியும் அதனால் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் பகிர்ந்துள்ளார்." என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 2 புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அதில் உமா அவர்களுடன் அமர்ந்து பேசும் ஒரு படமும், உமா அவர்களின் கையில் தலைவைத்து வணங்கும் படமும் உள்ளது.

யார் இந்த உமா?
பிரதமர் நரேந்திர மோடி இந்த பதிவை வெளியிட்ட பிறகு உமா சுச்தேவா பற்றி சமூக வலைதளங்களில் பலர் தேட தொடங்கினார்கள். உமா அவர்கள் ஒரு ராணுவ குடும்பத்தை சேர்ந்தவர். பிரதமர் நரேந்திர மோடி கூறியதை போல உமா சுச்தேவா அவர்களின் கணவர் எச்.கே.சுச்தேவா இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றியவர்.

வேத் பிரகாஷ் மாலிக்
இந்திய ராணுவத்தின் 19 வது தலைவராக பணியாற்றிய வேத் பிரகாஷ் மாலிக் உமா சுச்தேவாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. வேத் பிரகாஷ் மாலிக் இந்திய ராணுவத்தின் தலைவராக கடந்த 1997 முதல் 2000 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். கார்கில் போரின்போது ராணுவத்தின் தலைவராக இருந்தது இவர்தான். 'Kargil: From Surprise to Victory' என்ற தலைப்பில் கார்கில் போர் பற்றியும், 'India's Military Conflicts and Diplomacy: Inside View of Decision Making' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications