உ.பி. சைக்கிள் மெக்கானிக் முகமது ஷெரீப்பிற்கு பத்மஸ்ரீ விருது! ஏன் தெரியுமா? நெகிழ வைக்கும் காரணம்
டெல்லி: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதாகும் சைக்கில் மெக்கானிக், முகமது ஷெரீப்பிற்கு 2020ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தால் வழங்கப்பட்டது.
இந்த உயரிய விருதை வாங்கும் முமகமது ஷெரீப், ஷெரீப் சாச்சா என்று அந்த பகுதி மக்களால் அன்பாக அழைக்கப்பட்டு வரும் ஒரு முதியவர். கொரோனா பரவல் காரணமாக, 2020ல் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெறாத நிலையில், அவ்வாண்டுக்கான விருதை நேற்று வழங்கினார் குடியரசு தலைவர்.
ஒவ்வொருவரும் ஒரு சாதனை படைத்து விருதுகளை பெற்றனர். அதில், முகமது ஷெரீப்பிற்கு விருது கிடைத்த பின்னணி, உருக்கமானது, நெகிழ்ச்சியானது.

பாபர் மசூதி இடிப்பு
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கரசேவகர்களால் உடைக்கப்பட்ட நிலையில், நாடு முழுக்க கலவரம் வெடித்த கால கட்டம் அது. 1992ம் ஆண்டு, கலவரம் உச்சத்திலிருந்த ஊர்களில் ஒன்று சுல்தான்பூர். ஆனால் அங்கே செல்ல வேண்டிய வேலை முகமது ஷெரீப்பின் மகன் ரயீஸ்-சுக்கு இருந்தது.

கலவரத்தில் கொலை
ரயீஸ் சுல்தான்பூர் சென்றபோது மத கலவரத்தில் சிக்கி, படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் ரயில் தண்டவாளத்தின் அருகே கேட்பாரற்று கிடந்தது. தெருநாய்களால் ரயீஸ் உடல் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பற்றி அறிந்த முகமது ஷெரீப் வேதனைக்கு மத்தியில், ஒரு வைராக்கியத்தையும் கையில் எடுத்தார். அதாவது, அநாதை பிணங்கள் கண்டெடுக்கப்பட்டால், முகமது ஷெரீப்பே, அவற்றை மரியாதையோடு அடக்கம் செய்ய ஆரம்பித்தார்.

'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியில் பங்கேற்பு
பாலிவுட் நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சத்யமேவ் ஜெயதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு முகமது ஷெரீப் நாடு முழுக்க பிரபலமானார். அப்போதுதான் ஷெரீப் செய்யும் சமூக சேவை அனைவரது கவனத்திற்கும் போனது. ஷரீப், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களின் உடல்களை மட்டும் அடக்கம் அல்லது தகனம் செய்வதோடு இல்லாமல், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களுக்கும் இறுதிச் சடங்குகளு ஏற்பாடு செய்தவராகும். 25,000 உடல்களுக்கு இவ்வாறு அவர், மரியாதை செய்துள்ளஅார்.

பத்மஸ்ரீ விருது
இந்த தன்னலமற்ற சேவையின் செயல்தான் அவருக்கு 2020 இல் இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீயைப் பெற்றுத் தந்தது. "ஒரு நாள் முன்னதாக உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. எங்களை டெல்லிக்கு வரவழைக்க மூன்று நபர்களுக்கு விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தனர். டெல்லியில் அசோகா ஹோட்டலில் தங்கினோம். திங்கள்கிழமை மாலை என் தந்தைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது." என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார், முகமது ஷெரீப் மகன் ஷாபர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications