• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இந்தியாவிலிருந்து போன முஸ்லிம்களுக்கு பாக்.கில் மரியாதையும், கவுரவமும் கிடைக்கவில்லை: மோகன் பாகவத்

Google Oneindia Tamil News

டெல்லி: சுதந்திரத்திரத்தின் போது பாரத தேசம் பிரிக்கப்பட்டபோது, இந்தியாவிலிருந்த முஸ்லிம்கள் ஏராளமானோர் பாகி்ஸ்தான் சென்றனர். ஆனால், இன்றளவும் இந்தியாவிலிருந்து சென்ற முஸ்லிம்களுக்கு மரியாதையும், கவுரவமும் கிடைக்கவில்லை. காரணம் அவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை அன்று டெல்லியில் நடந்த வீர சவார்க்கர் குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடந்தது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசும் போது, மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்கவே விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதங்களை எழுதினார் என்றார். ஆனால், அது குறித்த ஆதாரங்களை அவர் வெளியிடவோ சுட்டிக்காட்டவோ இல்லை.

5 பாதுகாப்பான நகரங்கள்: இங்கு சென்றால் உங்களுக்கு வைரஸ் பாதிப்பு குறைவு5 பாதுகாப்பான நகரங்கள்: இங்கு சென்றால் உங்களுக்கு வைரஸ் பாதிப்பு குறைவு

மார்க்சிய மற்றும் லெனினிய சித்தாந்தங்களைப் பின்பற்றுவோர் சாவர்க்கரை ஃபாசிஸ்ட் என்று தவறாகக் குற்றம் சாட்டுவதாகவும் ராஜ்நாத்சிங் விமர்சித்தார். மேலும் ராஜ்நாத் சிங் பேசும் போது, இந்திய வரலாற்றில் சாவர்க்கர் ஒரு முக்கியமான சின்னம் அவர் அப்படிப்பட்டவராகவே தொடர்வார் என்றார். சாவர்க்கர் பற்றி கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் அவரை தாழ்ந்து நோக்குவது முறையானதோ ஏற்றுக்கொள்ளத்தக்கதோ அல்ல என்று கூறிய ராஜ்நாத் சிங் , சுதந்திரத்திற்காக போராடியவர் சாவர்க்கர் என்று தனது கருத்தை பதிவு செய்தார்.

சனாதன தர்மம்

சனாதன தர்மம்

நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசும் போது, இந்தியாவின் பழங்கால கலாச்சாரமான இந்துத்துவா, சனாதன தர்மம் ஆகியவை சுதந்திரமானவை என்றார். "இந்தக் கலாச்சாரத்தை நாம் தலைமுறைகளாக வளர்த்து வருகிறோம். வழிபாட்டை அடிப்படையாக வைத்து யாரும் இதைப் பிரித்துப் பார்க்கவில்லை. இந்துக்கள், முஸ்லிம்களின் மூதாதையர்கள் ஒன்றுதான். இந்த சிந்தனை மட்டும் சுதந்திரப் போராட்டத்தின்போது அனைவரின் மனதில் இருந்திருந்தால், அப்போதே இந்தியா பிளவுபடுவதைத் தடுத்திருக்கலாம்" என்று மோகன் பாகவத் கூறினார்.

சித்தாந்தம்

சித்தாந்தம்

சாவர்க்கர் பற்றி மோகன் பாகவத் பேசும் போது, வீர சாவர்க்கார் ஒரு தேசியவாதி, தொலைநோக்குடையவர். சவார்க்கரின் இந்துத்துவா என்பது ஒருங்கிணைந்த இந்தியாதான், மதம், சாதி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் யாரிடமும் பாகுபாடுகாட்டக்கூடாது என்பதுதான் அவருடைய சித்தாந்தம். இதுதான் இந்த தேசத்தின் அடிப்படையாகும்.

தேசியவாதம்

தேசியவாதம்

சவார்க்கர் ஒருமுறை கூறுகையில், இந்தியாவை ஆள வேண்டுமானால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினால்தான் முடியும் என்றுபுரிந்து கொண்டனர். அதனால்தான் அவர்கள் பிரிவினையை ஏற்படுத்த அதிகம் முயன்றனர். அந்தமான் சிறையிலிருந்து சவார்க்கர் வந்தபின் எழுதிய புத்தகத்தில், பல்வேறு விதமான மதவழிபாடுகள் இருந்தாலும் இந்து தேசியவாதம் ஒன்றுதான் என்று எழுதினார். தேசத்தைப் பிரித்தால்தான் கொள்ளையடிக்க முடியும், ஆள முடியும் என்று ஆங்கிலேயர்கள் நம்பினர். இந்திய சமூகத்தில் பலரும் இந்துத்துவா, ஒற்றுமை குறித்துப் பேசுகிறார்கள். ஆனால், சவார்க்கர் இதை சத்தமிட்டு பேசினார். இப்போது பல ஆண்டுகளுக்குப்பின், அதை உணர்ந்த நாம், ஒவ்வொருவரும் அவர் கூறிய நாட்டில் எந்தப் பிரிவினையும் வந்துவிடக்கூடாது என்று சத்தமிட்டு கூறுகிறோம்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

சுதந்திரத்திந்போது இந்த தேசம் பிரிக்கப்பட்டபோது, இந்தியாவிலிருந்த முஸ்லிம்கள் ஏராளமானோர் பாகி்ஸ்தான் சென்றனர். ஆனால், இன்றளவும் இந்தியாவிலிருந்து சென்ற முஸ்லிம்களுக்கு மரியாதையும், கவுரவமும் கிடைக்கவில்லை. காரணம் அவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.இதை யாராலும் மாற்ற முடியாது. நமக்கு ஒரே மூதாதையர்கள்தான், நம்முடைய வழிபாட்டு முறைகள் வேறுபட்டுள்ளது. சனாதன தர்மத்தின் சுதந்திரமான கலாச்சாரத்தில் இருக்கிறோம். இதற்கு நாம் பெருமைப்பட வேண்டும், இதனால் தான் இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம்.

மோகன் பாகவத் பேச்சு

மோகன் பாகவத் பேச்சு

சவார்க்கரின் இந்துத்துவா, விவேகானந்தர் இந்துத்துவா என்பதெல்லாம் இல்லை, அனைத்தும் ஒன்றுதான் . எங்கே அனைவரும் ஒரே கலாச்சார தேசியவாதத்தைப் பற்றி பேசுகிறார்களா , அங்கு சித்தாந்தத்தின் அடிப்படையில் மக்கள் வேறுபடுவதில்லை. ஏன் நாம் வேறுபட வேண்டும். ஒரே தேசத்தில்தானே பிறந்தோம். ஒன்றாகத்தானே போராடினோம். நாம் வழிபடும் கடவுளும், முறையும்தான் வேறுபட்டுள்ளது. பல்வேறு விதமான கடவுள் வழிபாடு என்பது நமது பாரம்பரியமாக வந்தது" இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.

English summary
RSS chief Mohan Bhagwat on Tuesday Speaking at the launch of the book 'Veer Savarkar that the Muslims who had migrated to Pakistan "have no respect there" and there is a liberal culture in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X