"என் துரோகி நண்பா.." மத்திய அமைச்சரை பார்த்து ராகுல் காந்தி சொன்ன வார்த்தை.. பரபரத்த நாடாளுமன்றம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ரவ்னீத் சிங் பிட்டுவை பார்த்து ராகுல் காந்தி, "துரோகி நண்பர்" என்று குறிப்பிட்டார். அதற்குப் பதிலுக்கு ராகுல் காந்தியை நாட்டின் எதிரி என்று ரவ்னீத் சிங் குறிப்பிட்டார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த வார்த்தை மோதல் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் - பாஜக இடையே நாடாளுமன்ற வளாகத்தில் புதிய மோதல் வெடித்தது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

துரோகி
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மக்கர் துவாரில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு அந்த வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது ரவ்னீத் சிங்யை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, "இதோ ஒரு துரோகி போய்க் கொண்டிருக்கிறார். முகத்தைப் பாருங்கள்..." என்றார். அப்போது அங்கிருந்த எம்பிக்கள், "நரேந்திரா சரணடர்" என முழக்கமிட்டதால் அங்குச் சிரிப்பலை ஏற்பட்டது.
நாட்டின் எதிரி
மேலும், ரவ்னீத் சிங்கிடம் கை கொடுக்கப் போன ராகுல் காந்தி, அப்போதும் அவரை மீண்டும் துரோகி எனக் குறிப்பிட்டார். மேலும், "என் துரோகி நண்பா. கவலைப்படாதே, நீ மீண்டும் காங்கிரஸுக்கே வருவாய்" என்றார். ராகுல் காந்திக்கு அங்கேயே ரவ்னீத் சிங் பதிலடி கொடுக்கவும் முயன்றார். ராகுல் காந்தியை நாட்டின் எதிரி எனக் குறிப்பிட்ட ரவ்னீத் சிங், அவருடன் கை குலுக்க மறுத்தார். இப்படி வார்த்தை மோதல்கள் இருந்தாலும் கடைசி வரை இருவருமே புன்னகையுடன் இருந்தனர்.
#WATCH | Delhi: As Union MoS Ravneet Singh Bittu passes by the protesting Congress MPs at Makar Dwar, Lok Sabha LoP Rahul Gandhi says, "Here is a traitor walking right by. Look at the face..."
— ANI (@ANI) February 4, 2026
LoP Rahul Gandhi offered to shake his hands, saying, "Hello brother, my traitor… pic.twitter.com/5wMgjM8KAW
யார் இந்த ரவ்னீத் சிங்
முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த் சிங்கின் மகன் தான் இந்த ரவ்னீத் சிங் பிட்டு. இவர் 2021ல் லோக்சபாவில் காங்கிரஸ் எம்பிக்களின் தலைவராகவும் இருந்துள்ளார். 2009 முதல் பஞ்சாப்பில் காங்கிரஸ் சார்பில் வென்று எம்பியாக இருந்தவர். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பு அவர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார். அந்த தேர்தலில் பாஜக சார்பில் லூதியானாவில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும், ராஜ்யசபாவுக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். மத்திய ரயில்வே இணை அமைச்சராகவும் உள்ளார்.
அமெரிக்கா- இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்த இந்தப் போராட்டத்தில், இந்திய ஏற்றுமதிகள் மீதான வரியை அமெரிக்கா 18%ஆக குறைத்தது. அதேநேரம் பல்வேறு துறைகளிலும் அமெரிக்க இறக்குமதியை இந்தியா திறந்துவிட்டதாகும் இதில் பிரதமர் மோடி அடிபணிந்துவிட்டார் என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது. வலுக்கட்டாயமாக மோடி அரசு ஒப்புக்கொண்டதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
ராகுல் காந்தி
கடந்த இரு நாட்களாகப் பிரதமர் மோடி மீதான ராகுல் காந்தியின் விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ளன. பிரதமர் அழுத்தத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல் காந்தி தெரிவித்தார். பல மாதங்களாகக் கிடப்பில் இருந்த வர்த்தக ஒப்பந்தம் திடீரென இறுதி செய்யப்பட்டதன் பின்னணி குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். அமெரிக்காவில் அதானிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பைல்ஸ் ஆகியவற்றையும் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். நாட்டு மக்களிடம் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான அமெரிக்க நீதித்துறை ஆவணங்களில் பிரதமர் பற்றிய குறிப்புகளை வெளிவிவகார அமைச்சகம் நிராகரித்தது. பிரதமர் 2017-ல் இஸ்ரேலுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வப் பயணத்தைத் தாண்டி, அதில் இருக்கும் தகவல்கள் ஆதாரமற்ற யூகங்கள் என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்.. புதிய தலைவர் மாணிக்கம் தாகூர்? ராகுல் காந்தி கிரீன் சிக்னல்?












Click it and Unblock the Notifications