மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்த நயினார் நாகேந்திரன்! என்ன மேட்டர்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில் நடந்த விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மூத்த தலைவர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார்.

Nainar Nagendran s Delhi Meeting With Sitharaman Fuels TN BJP Alliance Buzz

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும் சூழலில் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையின் முதல் அத்தியாயம் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பு முடிந்து அன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், "ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை கூட்டணிக்குள் கொண்டுவருவது பற்றியோ, தொகுதி பங்கீடு பற்றியோ பேசவில்லை. பொதுக்குழுவில் நடந்த விவரங்கள் குறித்து பேசினேன். எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தேன்" என்று கூறினார்.

இந்நிலையில், நயினார் நாகேந்திரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், நயினார் நாகேந்திரன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, தான் மேற்கொண்ட யாத்திரையின்போது மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நிர்மலா சீதாராமனிடம் நயினார் நாகேந்திரன் வழங்கி உள்ளார். மேலும், தமிழக சட்டசபை தேர்தல் பணிகள், கூட்டணி குறித்தும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் மற்றும் தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

நிதி அமைச்சர் உடனான சந்திப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், "இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து, கடந்த 32 நாட்களில் 67 கட்சி மாவட்டங்களில் உள்ள 36 கட்சி மாவட்டங்களில் நடைபெற்ற "தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்" யாத்திரையின் போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கினேன்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+