• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம்.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அதிரடி உரை

|
  நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அதிரடி உரை

  டெல்லி: வேர்களை மறந்துவிட கூடாது என்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தெரிவித்தார்.

  டெல்லியில் இன்று மாலை, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், நரேந்திர மோடியை, லோக்சபா குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.

  Narendra Modi warned NDA netas not to be swayed by power

  நரேந்திர மோடி பிரதமராவதற்கான அங்கீகாரத்தை எம்பிக்கள் கொடுத்ததையடுத்து, நாடாளுமன்ற மண்டபத்தில், அவர்கள் மத்தியில் மோடி உரையாற்றினார்.

  அப்போது அவர் கூறியதாவது: தேர்தல்கள் என்பது பொது மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி பிரிவினைக்கு தூண்டக்கூடிய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால், இந்த தேர்தல் தடைகளை உடைத்தெறிந்து விட்டு, இதயங்களை இணைக்க பயன்பட்டுள்ளது.

  மக்கள் சேவையில் நமது அர்ப்பணிப்பு உணர்வு காரணமாக மீண்டும் நம்மை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

  ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆளுநர் அழைப்பு... வருகிற 30 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்

  இவ்வளவு பெரிய வெற்றியைத் தந்து இருப்பதன் மூலமாக, எங்களது பொறுப்பும் அதிகரித்துள்ளதாக உணர்கிறேன். புது புத்துணர்ச்சியோடு நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய தேவை உள்ளது.

  தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மூத்த தலைவர்கள், உங்களின் ஆசீர்வாதத்தை எனக்கு அளித்துள்ளீர்கள். இந்த கூட்டணியின் தலைவராக என்னை, தேர்ந்து எடுத்துள்ளீர்கள். ஆனால் நான் உங்களில் ஒருவனாக இருக்கிறேன். உங்களுக்கு சமமானவனாகவே இருக்கிறேன்.

  தோளோடு தோள் நிற்க, நான் ஆசைப்படுகிறேன். இந்த தேர்தலில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வாக்களித்துள்ளனர். அடுத்த தேர்தலில் ஆண்களை விடவும் அதிகமாக வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

  நம்மை நம்பிய அவர்களால் நாம் இந்த இடத்துக்கு வந்துள்ளோம். நம்மை இன்னும் நம்பாதவர்களுக்கும் சேர்த்து, நாம் இங்கு இருந்து பணியாற்ற உள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இரு பாதைகளில் பயணிக்கும். ஒன்று பிராந்திய விருப்பங்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்வது.. மற்றொன்று தேசிய குறிக்கோள்களை அடைவது.

  தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் அதிகார போதையில், புகழ் வெளிச்சத்திற்கு ஆசைப்படக்கூடாது. உங்களது வேர்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தேவையின்றி சர்ச்சை பேச்சுக்கள் பேசக்கூடாது. வெளி உலகத்திற்கு வராத ஆப்-தி ரெக்கார்ட் பேச்சு இன்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. இதை உணருங்கள். இவ்வாறு நரேந்திர மோடி உரையாற்றினார்.

   
   
   
  English summary
  Prime Minister Narendra Modi warned NDA netas not to be swayed by power and fame and advised them to remember their roots.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X