2014-க்கு முன்பு ஊழல்களில் சிக்கி கிடந்த இந்தியா மீண்டெழுந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்
டெல்லி: பல கோடி ஊழல்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள் என 2014-க்கு முன்பு இருந்த சூழ்நிலைகளில் இருந்து நமது இந்திய தேசம் மீண்டு எழுந்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு பிஎம்கேர்ஸ் குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியா தனது சொந்த பலத்தை நம்பி இருக்கிறது. நாட்டின் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரை இந்தியா நம்பி இருக்கிறது. பிரச்சினைகளுடன் இல்லாமல் தீர்வை தருவதாக இந்தியா வெளிவந்தது. உலகின் அனைத்து நாடுகளுக்கும் பெருந்தொற்றை தடுப்பதற்கான மருந்தையும், தடுப்பூசிகளையும் வழங்கினோம். அனைத்து குடிமகன்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாகவும், உலக நாடுகள் வியந்து பார்க்கும் நாடாகவும் இந்தியா உள்ளது.
இன்று மத்திய அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. எமது அரசு மீது நாட்டு மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பல கோடி ஊழல்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் பிராந்திய பாகுபாடுகள் போன்ற 2014-ம் ஆண்டில் சிக்கியிருந்த தீயசூழல்களில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. இந்த நிகழ்வு குழந்தைகளான ஒரு சிறந்த உதாரணம். அனைத்துக் கடினமான நாட்களும் கடந்து போகும்.
தூய்மை இந்தியா இயக்கம், ஜன்தன் திட்டம், வீடுகள் தோறும் குடிநீர் திட்டம் போன்ற நலத்திட்டங்கள் மூலம் அனைவரும் இணைவோம், அனைவரின் முயற்சி என்ற உணர்வுடன் அரசாங்கம் செயல்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளை ஏழைகள் நலன் மற்றும் சேவைக்காக அரசு தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளது. ஒரு குடும்ப உறுப்பினராக, உங்களின் துயரங்களையும், சுமைகளையும் குறைப்பதற்கும், ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் அரசு முயற்சித்து வருகிறது.
தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் ஏழைகளின் உரிமைகளை அரசு உறுதி செய்துள்ளது. இதனால் ஏழைகள் அரசின் நலத்திட்டங்களை பெற்று வருகின்றனர். மக்களிடம் இத்தகைய நலத் திட்டங்களைத் தொடர்ந்து பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையை அதிகரிக்க எங்கள் அரசு 100% அதிகாரமளிக்கும் இயக்கத்தை நடத்துவோம். இந்தியா, கடந்த 8 ஆண்டுகளில் அடைந்துள்ள வளர்ச்சியை யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. தற்போது உலக அளவில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது. உலக அளவில் இந்தியாவின் பலம் உயர்ந்துள்ளது. இதனை இளைஞர் சக்தி முன்னெடுத்துச் செல்கின்றன. உங்கள் கனவுகள் நிறைவேற நாங்கள் எங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்போம்; அது நிறைவேறும். பிரதமர் மோடி இவ்வாறு பேசினார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications