நேஷனல் ஹெரால்டு வழக்கு! 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரான ராகுல்! போர்களமான காங்கிரஸ் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு இன்று 3வது நாளாக ராகுல்காந்தி ஆஜரானார். முன்னதாக அவர் தனது வீட்டில் இருந்து சகோதரி பிரியங்கா காந்தியுடன் காரில் புறப்பட்டு சென்றார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகள் பரிமாற்றத்தில் சட்டத்துக்கு விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராக இருவருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ராகுல் காந்தியிடம் விசாரணை

ராகுல் காந்தியிடம் விசாரணை

சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி உள்ளார். ராகுல்காந்தி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். நேற்றும், நேற்று முன்தினம் என 2 நாட்கள் ராகுல்காந்தி ஆஜராகி விளக்கம் அளித்தார். இன்று 3வது நாளாக விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

கைது நடவடிக்கை

கைது நடவடிக்கை

இதற்கிடையே காங்கிரஸ் சார்பில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பரபரப்பாக உள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க 144 தடை உத்தரவு மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட்சியினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

 போர்களமான போராட்டம்

போர்களமான போராட்டம்


போலீசார், துணை ராணுவத்தினர் காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்ய கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றி சென்றனர். அப்போது சிலரை சாலையில் படுத்தனர். இதையடுத்து அவர்களையும் பெண் போலீசார் இழுத்துச் சென்றும், தூக்கிச்சென்றும் கைது செய்தனர். மேலும் எம்பி, எம்எல்ஏக்களை காங்கிரஸ் அலுவலகத்துக்குள் அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதேபோல் அமலாக்கத்துறை அலுவலம் முன்பும் காங்கிரஸார் போராட்டத்தை நடத்தினர். அங்கும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் இருஇடங்களும் போர்களமாக காட்சியளித்தது.

 3வது நாளாக ராகுல் ஆஜர்

3வது நாளாக ராகுல் ஆஜர்

இதற்கிடையே ராகுல்காந்தி இன்று காலை 11.40 மணிக்கு தனது வீட்டில் இருந்து காரில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி புறப்பட்டார். அவருடன் பிரியங்கா காந்தியும் சென்றார். ஏற்கனவே 2 நாள் விசாரணை நடந்த நிலையில் இன்று 3வது நாளாக ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். முதல் நாள் ராகுல்காந்தியிடம் 10 மணிநேரமும், 2வது நாள் 12 மணிநேரமும் விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+